சிந்து சமவெளி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்..? நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்!

சென்னை : பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழில் வளர்ந்து வரும் நாயகர்களில் முன்னணியில் உள்ளார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான தாராள பிரபு ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் திரைப்படத்தின் ரீமேக் ஆக அமர்ந்த நிலையில் தற்போது மற்றுமொரு ரீமேக் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் படமான சிந்து சமவெளி படத்தில் நடித்ததைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

பல ஆண்டுகளாக போராடி

பல ஆண்டுகளாக போராடி

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை அடைய பல ஆண்டுகளாக போராடி தற்பொழுது சில வெற்றி படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்பொழுது மிகப்பெரிய ரசிகைகள் கூட்டத்துடன் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அறிமுகமான ஹரிஷ் கல்யாண்

அறிமுகமான ஹரிஷ் கல்யாண்

தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் நடிக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகளை கடக்க உள்ள நிலையில் தற்பொழுது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

காதல் மன்னனாக

காதல் மன்னனாக

யுவன்சங்கர் ராஜா தனது தயாரிப்பில் தயாரித்த முதல் திரைப்படமான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெண்களின் மனதை கொள்ளை கொண்டு காதல் மன்னனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண், இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பலதரப்பட்ட காதல் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

போட்ட விக்கி டோனர்

போட்ட விக்கி டோனர்

தமிழ் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரங்களை பெற்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்ட விக்கி டோனர் என்ற திரைப்படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ஹரிஷ் கல்யாண் நடித்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தாராள பிரபு

தாராள பிரபு

இதுவரை நேரடி தமிழ் கதைகளைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல்முறையாக இந்தி ரீமேக் படமான தாராள பிரபு படத்தை தொடர்ந்து, தற்பொழுது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பெல்லி சூப்புளு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ஜோடியாக பிரியா பவானி சங்கர்

ஜோடியாக பிரியா பவானி சங்கர்

இன்னும் பெயரிடப்படாத பெல்லி சூப்புளு தமிழ் ரீமேக் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக முதன் முறையாக பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த இதன் படப்பிடிப்பு வேலைகள் முற்றிலும் முடிந்து தற்பொழுது வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

மனம் திறந்து பேசியுள்ளார்

மனம் திறந்து பேசியுள்ளார்

இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ஹரிஷ் கல்யாண் அதில் தொகுப்பாளர் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நிலையில் சிந்து சமவெளி படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

விருப்பப்பட்டுதான் நடித்தேன்

விருப்பப்பட்டுதான் நடித்தேன்

சிந்து சமவெளி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஹரிஷ் கல்யாண், தான் அந்த படத்தில் நடிக்கும்போது அந்த அளவிற்கு எனக்கு சினிமா அனுபவம் இல்லை, ஆனால் முழு கதையையும் கேட்டு விருப்பப்பட்டுதான் நடித்தேன். அதைப்பற்றி வருத்தப்படுவதற்கும், தவறாக அந்த படத்தை தேர்வு செய்து விட்டேன் என பலரும் சொல்வதற்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

கவலைப்படுவதும் இல்லை

கவலைப்படுவதும் இல்லை

சிந்து சமவெளி படத்தில் நடித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது அதைப்பற்றி நான் யோசிப்பதும் இல்லை கவலைப்படுவதும் இல்லை என தான் அறிமுகமான சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி திரைப்படத்தை பற்றி ஓபனாக ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X