சினிமாவில் சஸ்டெயின் பண்றது கொஞ்சம் கஷ்டம் , ஆனா அது தான் எனக்கு இஷ்டம்

Recommended Video

நான் ஹீரோ விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்டிஸ்ட் _ ACTOR IRFAN INTERVIEW_FILMIBEAT TAMIL

வளர்ந்து வரும் தமிழ் நடிகர் இர்பான்.

பட்டாளம்,சுண்டாட்டம் போன்ற படங்களில் நடித்து தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

Actor irfan interview

தனது திரை வாழ்க்கை மற்றும் நடித்த படங்கள் மற்றும் தற்போது நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தில் நடித்த அனுபவம் போன்ற பல்வேறு விஷயங்களைச் நமது பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

எப்படி இருந்தது ராஜாவுக்கு செக்?

ரொம்ப நன்றாக இருந்தது.
வில்லனாக ஒரு புது முயற்சி படம் பார்த்த அனைவரும் பாராட்டினர்.
இது ஒரு லைப் டைம் எக்ஸ்பிரியன்ஸ். இது கொஞ்சம் கடினமாக இருந்தது நான் மிகவும் கொடுத்து வைத்தவன் இது போன்ற ஒரு படத்தில் நடிக்க என்று மிக சந்தோஷத்துடன் தெரிவித்தார் இர்பான்.

Actor irfan interview

சேரன் உடன் நடித்த அனுபவம் ?

அவருடன் முதலில் நடித்தது சண்டை காட்சியில் தான். நான் அதிக உடல் எடை உடன் இருந்தேன், சேரன் சார் சற்று கம்மியாக இருந்தார். பார்த்து
செய் என்று கூறினார். டிப்ஸ் கொடுப்பார் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல் அவர் ஒரு லெஜன்ட் என்று புன்னகை உடன் கூறினார் இர்பான்.

அங்காடி தெரு படத்தில் நீங்கள் தான் முதலில் நடித்தீர்கள் என்று கேள்வி பட்டோம் ?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் ஷோவில் நான் கலந்து கொண்ட பிறகு எனக்கு பல பட வாய்ப்புக்கள் வந்தது. ஏகன் படத்தில் நவ்தீப் நடித்த கதாபாத்திரம் மற்றும் சரோஜா படத்தில் நடிகர் வைபவ் நடித்த கதாபாத்திரம், அங்காடி தெரு மற்றும் பட்டாளம் இந்த நான்கு படங்கள் கிடைத்தன. படத்திற்காக உடம்பை குறைத்தேன் பல கஷ்டங்கள் பட்டேன் ஆனால் கடைசி நேரத்தில் மகேஷ் நடிப்பதாக கூறியதும் என்னை அதில் இருந்து தூக்கிவிட்டனர் அது தான் முதல் ஏமாற்றம்.

இத்தனை வருட திரைப்பயணம் சினிமா கற்று கொடுத்தது என்ன ?

நான் சில வருடங்களாக படங்கள் இல்லாமல் இருந்தேன் பல கஷ்டங்களை அனுபவித்தேன்.
மற்றும் பலர் அவமானபடுத்தினார்கள் இதனை எல்லாம் கடந்து வந்ததற்கு காரணம் சினிமாவில் மேல் எனக்கு உள்ள ஆசை காதல் தான். என்றோ ஒரு நாள் நான் உழைத்தற்கு இன்று பலன் கிடைத்துள்ளது படம் நடித்துள்ளேன்

எல்லோரும் என்னை பற்றி எழுதுகின்றனர் அதுவே சந்தோஷம் என கூறினார் இர்பான்.

More from Filmibeat

Read more about: interview rajavukku check cheran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X