மாடியில் இருந்து விழுந்த மகள்.. ஆம்புலன்ஸ் ஆம்புலன்சா ஏறினேன்.. குமுறி அழுத ஜித்தன் ரமேஷ்!

சென்னை: பிரபலமான தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மூன்றாவது மகன் தான் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் சௌத்ரி. ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானதால் இவர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்படுகிறார். ஜித்தன் படம் மாபெரும் ஹிட் பெற்றதால், இரண்டாவது பாகமும் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஜித்தன் 2 படம் வரவேற்பை பெறவில்லை. இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு சினிமா துறையில் இருந்து கிடைக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் யார்? என்ன கதை? என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்தடுத்த பல படத்தில் நடித்துதான் நான் செய்த மிகப்பெரிய தவறு, அதுதான் என் மார்க்கெட் போவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றார்.

Jithan Ramesh instagram
Photo Credit:

ஜித்தன் ரமேஷ் பேட்டி: தொடர்ந்து பல விஷயத்தை பேசிய ஜித்தன் ரமேஷ் என் வாழ்க்கையில் பல நம்பிக்கை துரோகங்களை நான் சந்தித்து இருக்கிறேன். என்னை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பார்ப்பார்கள். பலர் என்னிடம் வந்து சார் நீங்க சூப்பர் நடிகர், அந்த படத்தை பார்த்தேன் சார் சூப்பர் என பொய்யாக புகழ்வார்கள். அப்படி புகழ்ந்து கதை சொல்லி என்னை நம்ப வைத்து படம் எடுக்க வைத்துவிடுவார்கள். ஆனால், அதன் பிறகு தான் தெரியும் அவர்கள் என் முதுகில் குத்தியது. இது போல பலர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள்.

முகம் முழுக்க ரத்தம்: தொடர்ந்து மகள் குறித்து பேசிய அவர், என் மகள் என்றால் எனக்கு உயிர், மகள் தான் பிறக்க வேண்டும் என நான் ரொம்பவும் ஆசைப்பட்டேன். ஆனால், என் மகளுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவள் மாடியில் இருந்து விழுந்து விட்டார். விழுந்ததில் தலையில் அடிபட்டு, முகத்தில் அடிபட்டு ரத்தமாக கொட்டுகிறது. அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் ஆக ஏறுகிறேன். என்ன செய்வது என்று அந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையில் இந்த ஆம்புலன்சில் மட்டும் நான் போகவே கூடாது என நினைத்து இருந்தேன். ஆனால், அன்று இரவு மட்டும் மூன்று, நான்கு ஆம்புலன்ஸில் நான் ஏறி ஏறி இறங்கினேன். இந்த விஷயத்தை எப்போது நினைத்தாலும் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என் வாழ்வில் நான் மறக்க வேண்டும் என நினைக்கும் ஒரே விஷயம் இது தான் என ஜித்தன் ரமேஷ் அந்த பேட்டியில் மனவேதனையில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X