அம்மாவின் கனவு ஐ.பி.எஸ்.. படி படினு சொல்லிட்டே இருப்பாங்க.. கென் கருணாஸ்!
Recommended Video
சென்னை : என் அம்மாவுக்கு நான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று ஆசை அதனால் அசுரன் படப்பிடிப்புக்கு கூட புக் கொடுத்து அனுப்பினார்கள் என்று கென் கருணாஸ் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் அசுரன். இந்த படத்திற்கு ஜீவி இசையைமைத்து இருந்தார். படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார். படத்தில் மிக முக்கிய வேடத்தில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடித்து இருந்தார் .

கென் கருணாஸ் பண்ணிரெண்டாம் வகுப்பு படிப்பை படித்து கொண்டிருக்கும் போது தான் அவருக்கு அசுரன் வாய்ப்பு கிடைத்தது. கென் கருணாஸ் அம்மாவான கிரேஸ் கென் படிப்பில் மிகவும் கவனமாய் இருப்பார். அதனால் கென்னை அசுரன் பட படப்பிடிப்புக்கு அனுப்ப மிகவும் குழப்பத்தில் இருந்தார். படப்பிடிப்பு சரியாக பரீட்சை நேரத்தில் வந்ததால் கிரேஸ் இயக்குனரிடம் ஒரு கோரிக்கை வைத்தார் , பரீட்சை அப்போது மட்டும் விடுப்பு விடுமாறு கேட்டார்.

அதற்கு வெற்றிமாறன் உறுதி அளிக்க முடியாது ஒன்னு கென் படிப்பை தொடருவான் அல்லது நடிப்பான் என உறுதியாய் கூறிவிட்டார். கருணாஸ்க்கு கென் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே இருந்தது. ஏனெனில் இந்த மாதிரி கூட்டணியில் கென் நடிப்பது கண்டிப்பாக அவனது வாழ்கையில் முக்கியமான ஒன்றாக கருதினார் .

ஆனால் கென் அம்மா கிரேஸ் எதிர்பார்த்ததை போல கென்னின் தேர்வு நேரத்தில் படப்பிடிப்பில் இருந்து விடுமுறை கிடைக்க அவர் நன்கு படித்து பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்து இருக்கிறார். கென் நன்றாக படிக்கும் பையன் தான் இருந்தும் நாம் படிக்க சொல்லி கொண்டே இருக்க வேண்டும் என்று கிரேஸ் படிக்க வைத்து கொண்டே இருப்பாராம். கிரேஸ்க்கு தன் மகன் ஐபிஎஸ் ஆக வேண்டும் என கனவு இருந்தது அதனால் தான் இப்படி படிக்க வைகிறாராம். மேலும் படப்பிடிப்பின் போதும் புத்தகங்களை கொடுத்து அனுப்பினாராம். புத்தகம் எடுத்து சென்றேன் ஆனால் படிக்கவில்லை என்று கென் கூறியிருந்தார்.

மேலும் கென் சிறு வயதில் ஒரு வார்த்தையை கூற வரவில்லை தடுமாறினேன் அதற்கு என் அம்மா சுற்றி சுற்றி அடித்தார் என்று கூறினார் அப்போது எனக்கு மனித உரிமை பற்றி தெரிந்து இருந்தால் கட்டாயம் பிடித்துகொடுத்து இருப்பேன் என்று நகைச்சுவையாக சமீபத்தில் கூறியிருந்தார். கிரேஸ் மட்டுமல்ல பல பெற்றோர்கள் தங்களது மகன் அல்லது மகளின் படிப்பு விசயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்து படிக்க வைத்து விடுவார்கள் இது தற்போதைய பெற்றோர்களிடம் இருக்கும் மனநிலை.


Click it and Unblock the Notifications











