வேற வழி இல்லை.. கெளதம் மேனன் சொன்னா செய்யணும்.. நடிகர் கண்ணன் பொன்னையா பேட்டி!
சென்னை: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குநரும், நடிகருமான கண்ணன் பொன்னையா அளித்துள்ள பேட்டி வெளியாகி இருக்கிறது.
Recommended Video
கெளதம் மேனனின் உதவி இயக்குநராக மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கண்ணன் பொன்னையா.

காக்க காக்க படத்தில் வில்லன் கோஷ்டியில் ஒருவராக நடித்திருந்த கண்ணன் பொன்னையா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில், கிழிந்த துணியை தைத்துக் கொண்டு, கார் கதவு இப்படி திறக்குமா? இல்லை இப்படி திறக்குமா? என கமல் சைகை செய்து காட்டும் காட்சியில் நடித்து கலக்கி இருப்பார்.
கெளதம் மேனன் உதவி இயக்குநர்கள் எப்படியாவது ஒரு காட்சியில், நடித்தே ஆக வேண்டும் என்று சொல்வார் என்றும், அவர் சொல்லி விட்டால், அந்த பேச்சுக்கு மறு பேச்சே கிடையாது. அப்படித்தான் தானும், நடிகராக மாறினேன் என கண்ணன் பொன்னையா கூறியுள்ளார்.
இன்று வெளியாகியுள்ள வரலக்ஷ்மி சரத்குமாரின் வெல்வெட் நகரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கண்ணன் பொன்னையா, இயக்குநராகும் தனது ஆசை குறித்தும், வெல்வெட் நகரம் படம் குறித்தும் கெளதம் மேனன் போலவே மிகவும் பொறுமையாக அழுத்தம் திருத்தமாக பேசி உள்ள வீடியோவை காண லிங்கை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











