Karthi: கைதி 2 படம் எப்போது வரும் தெரியுமா.. கார்த்தி சொன்ன பதில்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது கைதி. இந்தப் படத்தில் மிரட்டலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார் நடிகர் கார்த்தி.

குறைவான கேரக்டர்களில் நிறைவான படத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரது சமீபத்திய படங்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. இந்நிலையில் கைதி 2 படத்தின் அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் லோகேஷ் பிசியாக காணப்படுகிறார்.

Actor Karthi revealed about Kaithi 2 movie in his recent interview

கைதி 2 படம் குறித்து வெளிப்படுத்திய நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற படம் கைதி. இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். முன்னதாக மாநகரம் படத்தை கொடுத்திருந்த போதிலும் கைதி படம் மூலமாகவே தன்னை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படமே விஜய்யுடன் மாஸ்டர் படத்தின் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.

தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். முன்னதாக கடந்த ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்நிலையில் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷிற்கு கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஹீரோவாக அனிருத்துடன் இணைந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் கமிட்டாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

முன்னதாக கைதி மற்றும் விக்ரம் படங்களுக்கு ரசிகர்களிடையே கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து இந்தப் படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதில் முதலில் கைதி 2 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையொட்டி விக்ரம் படத்தின் LCUவில் கார்த்தி மற்றும் அவரது மகள் இணைந்திருந்தனர். இந்நிலையில் லியோ படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தின் இயக்கத்தை லோகேஷ் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அடுத்ததாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால் கைதி 2 படத்தின் அப்டேட் தெரியாமல் கார்த்தியின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் கைதி 2 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக நடிகர் கார்த்தி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாகவே இந்தப் படத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

Actor Karthi revealed about Kaithi 2 movie in his recent interview

அடுத்ததாக கார்த்தியின் ஜப்பான படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. இதையடுத்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தின் சூட்டிங் 50 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அடுத்ததாக 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் தான் இணையவுள்ளதாகவும் தற்போது உறுதி செய்துள்ளார் கார்த்தி. கைதி 2 படம் கண்டிப்பாக உருவாகும் என்று கார்த்தி மீண்டும் உறுதியுடன் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X