எனக்கு வாழ்க்கை கொடுத்தாங்க.. பெயரை மாற்ற காரணம்.. கௌதம் ராம் கார்த்திக் பேட்டி!
சென்னை: மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் மூலம் நடிகராக அறிமுகமான கவுதம் கார்த்திக். அந்த படத்தை தொடர்ந்து, என்னமோ ஏதோ, ரங்கூன், இவன் தந்திரன், பத்து தல போன்ற பல படங்களில் நடித்தார். இப்போது தனது பெயரை கவுதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ள இவர், கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அப்பா குறித்து சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் அவரைப்பற்றி பலவிதமான செய்திகள் வருவதை பார்க்கும்போது மகனாக எனக்கு வருத்தமாக இருக்கிறது. தயாரிப்பாளரோ, இயக்குநரோ அவரவர்கள் பட்ட வேதனைகள், வலிகள் என்ன என்பது அவர்களுக்குத்தான் தெரியும், இவர்களின் வலி பெரியது, அவர்களின் வலி பெரியது என்று சொல்லிவிட முடியாது. அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய பிளாட்பார்மில் இதை சொல்லாமல், தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்து பேச வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. எதுவாக இருந்தாலும், அவர்களின் வலிக்கும் வேதனைக்கும் நான் பதிப்பு கொடுக்கிறேன் என்றார்.

காரணம் இதுதான்: தொடர்ந்து பேசிய கௌதம் ராம் கார்த்திக், தனது பெயரை மாற்றியதற்கான காரணத்தை கூறினார். அதில், எனக்கு அம்மா வைத்த பெயர் கௌதம் ராம் கார்த்திக் தான். சினிமாவில் நடிக்க வந்த போது என் பெயரை சுருக்கி கௌதம் கார்த்திக் என்று வைத்துக்கொண்டேன். அண்மையில் என் தாத்தா முத்துராமின் சொந்த ஊருக்கு சென்றேன். அவரை பற்றி அந்த ஊரில் இருப்பவர்கள் பல விஷயத்தை கூறினார்கள். அதையெல்லாம் கேட்டு உண்மையில் நான் நெகிழ்ந்துவிட்டேன். நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் என் தாதாவும், அப்பாவும் தான். இதனால், தாதாவின் பெயர் ராமை என் பெயரோடு சேர்த்துக்கொண்டேன் என்று அந்த பேட்டியில் பல விஷயத்தை மனம்விட்டு பேசி உள்ளார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு: தற்போது கௌதம் கார்த்திக், கே.ஆர்.ஜி.கண்ணன் ரவி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படப்பிடிப்பு கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி, காஷ்மீர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











