வடிவேலு என்ட்ரி.. மாயி படத்துல இருந்து என்னை தூக்கிட்டாங்க.. உண்மையை உடைத்த நடிகர் கொட்டாச்சி!

சென்னை: மாயி படத்தில் நடிக்க வைக்க சரத்குமார் சாரே என்னை சிபாரிசு செய்த நிலையிலும், நான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது என காமெடி நடிகர் கொட்டாச்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

சினிமாவில் சில நடிகர்களின் காட்சிகள் தூக்கப்படுவதும், சில நடிகர்களையே படத்தில் இருந்து தூக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

ஆனால், பெரிய நடிகர்களால் ஓரங்கட்டப்படும் சிறிய நடிகர்களின் நிலை பரிதாபமான சூழலுக்கு செல்வதும் அவர்கள் ஆள் அட்ரஸே காணாமல் போய் விடுவதும் கொடுமையிலும் கொடுமை.

நடிகர் கொட்டாச்சி: விருமாண்டி, தூள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து காமெடி நடிகராக ரசிகர்கள் மனங்களில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் கொட்டாச்சி. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர் சினிமாவில் இருந்தே காணாமல் போய் விட்டார்.

அவருக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் சில முன்னணி காமெடி நடிகர்களால் கிடைக்காமல் போய் விட்டதாக சமீபத்தில் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் பேசி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 Actor Kottachi reveals how he lost chance in Maayi movie due to Vadivelu influence

மாமன்னனுக்காக கொண்டாடப்படும் வடிவேலு: ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அந்த படத்தில் ஏகப்பட்ட அட்ராசிட்டி செய்து பல கோடிகளை நஷ்டமடைய செய்தார் வடிவேலு என அவர் மீது ரெட் கார்டு போடப்பட்டது.

இந்நிலையில், அதன் பின்னர் மீண்டும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலமாக ஹீரோவான வடிவேலுவுக்கு அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. ஆனால், தனது திறமையான நடிப்பை மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் வெளிக்காட்டி மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் வடிவேலு. அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Actor Kottachi reveals how he lost chance in Maayi movie due to Vadivelu influence

மாயி படத்தில் இருந்து வெளியேற்றம்: சரத்குமார் சார் பரிந்துரையில் மாயி படத்தில் நடிக்கும் வாய்பு கிடைத்தது. ஆனால், கடைசியில் என்னை அந்த படத்தில் இருந்து தூக்கிட்டாங்க என சமீபத்திய பேட்டியில் நடிகர் கொட்டாச்சி உருக்கமாக பேசி உள்ளார்.

எந்த ரோலில் நடிக்க உங்களுக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்கிற கேள்விக்கு வடிவேலு சார் நடித்த ரோலுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது எனக் கூறியுள்ளார். இதன்மூலமாக வடிவேலு உள்ளே என்ட்ரியான நிலையில், தான் கொட்டாச்சி தனக்கு அந்த வாய்ப்பு பறிபோய் விட்டதை மறைமுகமாக கூறுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அள்ளித்தந்த வானம் படத்துல: பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவா உடன் படம் முழுக்க டிராவல் ஆகுற காட்சிகள் எல்லாமே படம் எடுத்து முடித்தனர்.

ஆனால், அதன் பின்பு விவேக் சார் படத்தில் என்ட்ரியான நிலையில், அவருடன் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வருவது போன்றும் பிரபுதேவாவுடன் நான் நடித்த காட்சிகள் அத்தனையையும் எடிட்டிங்கில் தூக்கிட்டாங்க.. இப்படி பல படங்களில் நான் நடித்த காட்சிகள் காணாமல் போயிருக்கு, சில படங்களில் நடிக்க அழைத்து விட்டு அதன் பின்னர் வேண்டாம் என்றும் சொல்லியிருக்காங்க என கொட்டாச்சி வருத்தத்துடன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X