‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என் வாழ்க்கையில் பட கேரக்டரை சந்தித்துள்ளேன்... மணிகண்டன் ஓபன் டாக்

சென்னை : நடிகர் மணிகண்டன் அடுத்தடுத்த கேரக்டர்களில் சிறப்பாக நடித்து வருகிறார்.

Recommended Video

எனக்கு Pair இல்லாததுக்கு இதான் காரணம் | Manikandan| Sila Nerangalil Sila Manithargal|Filmibeat Tamil

இவரது நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கேரக்டர் குறித்து பிலிமிபீட் நேயர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் மணிகண்டன்

நடிகர் மணிகண்டன்

நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் படத்தில் நடித்ததன்மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ளார். படத்தில் பழங்குடியின இளைஞராக அவர் நடித்துள்ளார். அந்த கேரக்டராகவே தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

பன்முகத் திறமை

பன்முகத் திறமை

சினிமாவில் சிறப்பான எழுத்தாளராகவும் வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவராகவும் நடிகராகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் மணிகண்டன். தற்போது சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

நெருக்கமான கேரக்டர்

நெருக்கமான கேரக்டர்

இந்தப் படத்தில் தான் ஏற்று நடித்துள்ள ராஜசேகர் என்ற கேரக்டரை தான் சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்டுள்ளதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கேரக்டராக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வசனம் எழுதியுள்ள மணிகண்டன்

வசனம் எழுதியுள்ள மணிகண்டன்

இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் மணிகண்டன். அப்போதே இந்தக் கதையில் எழுதும் வலிந்து திணிக்கப்படவில்லை என்பதை தான் உணர்ந்தததாகவும் படத்தில் கதைக்கு தேவையான கேரக்டர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அதனால்தான் படத்தில் தனக்கு ஜோடி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில்... ஒரே உடையில்

ஒரே நாளில்... ஒரே உடையில்

படம் ஒரே நாளில் நடைபெறுவதாக செல்வதால், மணிகண்டனின் கேரக்டர் ஒரே உடையில் வந்தாலும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக இந்த ராஜசேகர் என்ற கேரக்டருக்கு ஏற்படும் பல கேள்விகளே படத்தின் மையமாக காணப்படுவதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

பிடித்தமான வசனங்கள்

விஷால் வெங்கட் இயக்கியுள்ள இந்தப் படத்தில் டயலாக்குகளை தான் எழுதியிருந்தாலும் தன்னுடைய கேரக்டரின் அனைத்து வசனங்களும் தனக்கு பிடித்தமானதாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினியுடன் நடித்தது முதல் ஜெய்பீம் வரை அவர் தனது கேரக்டரை உணர்ந்து செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X