Meesai Rajendran: ஜெயிலர் அளவிற்கு லியோ வசூலிக்காது.. மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறும் பிரபலம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரஜினி மீண்டும் தன்னை சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்துள்ளார். இந்தப் படத்தின் கலெக்ஷனை விஜய்யின் லியோ படம் முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஜெயிலர் வசூலை விஜய்யின் லியோ படம் பீட் செய்ய முடியாது என மீசை ராஜேந்திரன் பேட்டி: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படம் உலகளவில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று வாரங்களை கடந்து இந்தப் படம் திரையரங்குகளில் சக்சஸ்புல்லாக ஓடி வருகிறது. படம் 600 கோடி ரூபாய் கலெக்ஷனை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியான ஜெயிலர் படம் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சாதனை புரிந்துள்ளது. தனது முந்தைய படம் பீஸ்ட் சொதப்பிய நிலையில், அதற்கும் சேர்த்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வசூலித்துக் கொடுத்துள்ளார் நெல்சன். அதற்கு பாராட்டு தெரிவிக்கும்வகையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்துள்ளார்.
மேலும் ரஜினி, நெல்சனுக்கு படத்தின் வசூலில் பங்களித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கான காசோலையை கலாநிதி மாறன், அவர்களிடம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது. இதையடுத்து இந்தப் படத்தின் காவாலா பாடலுக்கு சூப்பரான ஆட்டம்போட்ட தமன்னாவிற்கும் இதுபோல பரிசளிக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் படப்பிடிப்பின்போது தன்னுடைய தேதிகளில் அவர் குழப்பம் ஏற்படுத்தியதாகவும் அதனால் தயாரிப்பு தரப்பு அவர்மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படமாக வசூலிலும் சிறப்பாக அமைந்துள்ளது ஜெயிலர். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீசின்போதே விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறிப்பிடும்வகையில் காகம் -பருந்து கதையை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இதனால் விஜய் ரசிகர்கள் அவர்மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அவரது ஜெயிலர் படத்தை புறக்கணிப்பதாகவும் கூறினர்.
இந்நிலையில் ஜெயிலர் கலெக்ஷனை லியோ முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. லியோ படம் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. முன்னதாக விக்ரம் என்ற இன்டஸ்ட்ரியல் ஹிட் படத்தை லோகேஷ் கொடுத்துள்ள நிலையில், லியோ படமும் 1000 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லியோ படம் 300 -400 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டாது என்று நடிகர் மீசை ராஜேந்திரன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் கலெக்ஷன் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அதன் வசூலை லியோ படத்தால் முறியடிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி நடந்தால் தன்னுடைய மீசையை தான் எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்திரன் படத்தின் வசூலை தற்போது ஜெயிலர் படத்தின் வசூல் தாண்டும் என்று கூறப்படும் நிலையில் லியோ அந்த கலெக்ஷனை 100 சதவிகிதம் எட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
400 கோடிகளை லியோ படம் தாண்டாது என்று தான் எழுதித்தருவதாகவும் ஒப்பந்தம் செய்வதாகவும் குறிப்பிட்ட அவர் ஒரு லட்சம் ரூபாய் பெட் வைத்துக் கொள்ளலாம் என்றும் யூடியூப் சேனலின் ஆங்கரிடம் சவால் விடுகிறார். மிஸ்டர் மனைவி உள்ளிட்ட சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள மீசை ராஜேந்திரன், தன்னுடைய மீசைக்காகவே புகழ்பெற்றவர். அவர் லியோ படத்தின் வசூல் ஜெயிலரை முறியடிக்க முடியாது என்றும், அப்படி நிகழ்ந்தால் தன்னுடைய மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











