அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே பெண்ணா?.. ‘தக் லைஃப்‘ அசிங்கமான குப்பை.. கொந்தளித்த பிரபலம்!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் 5ந் தேதி தியேட்டரில் வெளியான ' தக் லைஃப்' திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ. 18 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் என நட்சத்திர பட்டாள உள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய மீசை ராஜேந்திரன், இப்படம் படு மோசமான படம் என விமர்சித்துள்ளார்.

தக் லைஃப் திரைப்படத்தில் டிரைலர் வெளியான போது, டிரைலர் சூப்பர், படம் நிச்சயமாக அட்டகாசமாக இருக்கும் என்று சொல்லி இருந்தேன், அதை நினைத்துத்தான் இப்போது வருத்தப்படுகிறேன். அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன். ஏன் என்றால், அன்பு என்னைக்கும் மன்னிப்பு கேட்காது. ஆனால், இசைவெளியீட்டு விழாவில் கமல் ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. இதனால், கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை, இதனால் கமலுக்கு பல கோடி நஷ்டம் தான். இருந்தாலும், படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

thug life kamal haasan Meesai Rajendran
Photo Credit:

மீசை ராஜேந்திரன்: 'தக் லைஃப்' படத்தை நாயகன் படத்தோடு ஒப்பிட்டு பேசுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 37 வருடத்திற்கு முன் அந்த படம் வந்து இருந்தாலும், அப்படி ஒரு படத்தை மணிரத்னத்தால் மீண்டும் எடுக்கவே முடியாது. நாயகன் திரைப்படம் ஒரு காவியம். ஒரு மிகப்பெரிய இயக்குநர், ஒரு மிகப்பெரிய நடிகர் இருவரும் சேர்ந்து, ஒரு அற்புதமான படைப்பை கொடுத்து இருக்க வேண்டும். இந்த திரைப்படத்தில் கதை, திரைக்கதையில் கோட்டைவிடப்பட்டுள்ளது. ஆனால், கமல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் கண் அசைவு, கை அசைவு, உடல் மொழி என அனைத்திலும் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கமல் போல ஒரு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவில் இல்லவே இல்லவே இல்லை.

வயசுக்கு ஏற்றபடி: தக் லைஃப் திரைப்படத்தின் கதையே கலாச்சாரத்தை கெடுக்கும் கதையாக உள்ளது, பெரிய தாதாவாக இருக்கும் கமல், சிம்பு தனது மகன் போல வளர்ந்து வருகிறார். நாயகன் படத்தில் வருவது போல, ரெட் லைட் ஏரியாவில் இருந்து த்ரிஷாவை காப்பாற்றி அவளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், கமலுக்கு, சிம்புக்கும் இடையே மோதல் வந்துவிட, கமல் இடத்தை பிடிக்கும் சிம்பு, அம்மாவாக பார்க்க வேண்டிய த்ரிஷாவிடம் அசிங்கமாக நடந்து கொள்வதை எல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கமல் இதற்கு முன் பல திரைப்படத்தில் 'ப்ளே பாய்' ரோலில் நடித்து இருக்கிறார். ஆனால், இந்த வயத்திற்கு மேல் முத்தக்காட்சி, காதல் காட்சியில் நடிப்பதை தவிர்த்து விட்டு வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கலாம். இந்த கதையை எப்படி ஒரு மாபெரும் இயக்குநர் மணிரத்னம் எடுத்தார் என்றே தெரியவில்லை.

கதையே இல்லை: நாயகன் திரைப்படத்தில் ஹீரோ எதற்கு போராடுகிறார், யாருக்காக போராடுகிறார் என்கிற ஒரு பேக்கிரவுண்ட் இருந்தது. ஆனால், 'தக் லைஃப்' படத்தில் யார் பெரியவர்கள், அப்பா பெரியவனா.... எடுத்து வளர்ந்த மகன் பெரியவனா என்று தான் கதை நகர்கிறது. உண்மையில் தமிழ் சினிமாவின் கலாச்சாரம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. அவன் பொண்டாட்டியை இவன் வைத்துக்கொள்வதும், இவன் மனைவியை அவன் வைத்துக்கொள்வதுமாக படம் எடுப்பது சரியில்லை. இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு இருக்க வாய்ப்பே இல்லை, கமலுக்கு கொடுத்த சம்பளத்தையும் சேர்த்து சொல்லுகிறார்கள். ஆனால், கமல் நடித்த விக்ரம் படத்தை விட தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் பாதிக்கு பாதிதான் வரும் என்று சொல்லப்படுகிறது என்று மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X