Mumtaz: நான் செத்ததுக்கு அப்பறம் அசிங்கமான போட்டோஸை போடாதீங்க.. கண்ணீருடன் மும்தாஜ் கோரிக்கை!

சென்னை: நடிகை மும்தாஜ், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான மற்றும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், பல படங்களில் சீரியஸான குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார். இவர் பழைய பேட்டி ஒன்றில், நான் செத்ததுக்குப் பின்னர் தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரவேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.

மும்தாஜ் கடந்த 1999ஆம் ஆண்டு டி. ராஜேந்திரன் இயக்கத்தில், வெளியான மோனிஷா என் மோனாலிசா படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், குஷி, சாக்லெட், லூட்டி, மலபார் போலீஸ், ஏழுமலை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மும்தாஜ் என்றாலே, கிளாமர், கிளாமர், கிளாமர் மட்டும்தான். கிளாமர் காட்சிகளில் தயக்கமே இல்லாமல் நடிக்கும் நடிகையாக மும்தாஜ் இருந்துள்ளார். இப்படியான நிலையில் இவர், கடந்த 2013ஆம் ஆண்டு அத்தடிண்டிகி தாரீடி என்ற படத்தில் தான் கடைசியாக நடித்தார். அதன் பின்னர் இவர் சினிமாவில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டார்.

mumtaz throwback

கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டார். அப்போது அவர் பலரது கவனத்தினை மீண்டும் ஈர்த்தார். மேலும், அப்போது அவர் சக போட்டியாளர்களிடம் பேசிய ஒரு விஷயம் பலரது கவனத்தினை ஈர்த்தது. அதாவது, நான் எந்து சிறு வயதில் கிளாமராக நடித்துவிட்டேன். அப்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடித்துவிட்டேன். ஆனால் இப்போது நான் நடித்த படங்கள், நடனமாடிய பாடல்களை எனது உடன் பிறந்தவர்களின் குழந்தைகளோடு அமர்ந்து வீட்டில் பார்க்க முடியவில்லை. எனக்கு அவ்வளவு சங்கோச்சமாக உள்ளது எனத் தெரிவித்தார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது.

ஆன்மீகவாதி: சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய மும்தாஜ் தற்போது முழுக்க முழுக்க இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் இறங்கிவிட்டார். இதுவரை மூன்று முறை மக்காவிற்குச் சென்றுள்ளார். மக்கா என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆன்மீகப் பயணம் செய்து சென்றடையும் இடம். இங்கு செல்லும் இஸ்லாமியர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கை இஸ்லாமிய மக்களிடடையே உள்ளது. இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் கூட மும்தாஜ் சென்றுவந்தார்.

மும்தாஜ்: மும்தாஜ் ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டார், பேட்டி ஒன்றில் பேசுகையில், “ நான் சிறுவயதில் எனது மதப்புத்தகமான குறானில் என்ன உள்ளது என தெரிந்து கொள்ளாமல் போய்விட்டேன். அதனைப் படித்திருந்தாலும், அதன் அர்த்தங்கள் எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு நான் இப்படி மாறியுள்ளேன் என்றால், குறானில் எனக்கு சொல்லப்பட்டது என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னால் எனது கடந்த காலத்தை மாற்ற முடியாது. எனவே, நான் எனது நிகழ்காலத்தில் அல்லாவுக்கு நெருக்கமானவளாக இருக்க முயற்சிக்கின்றேன்.

அசிங்கமான: நான் அனைவருக்கும் வைக்கும் ஒரு கோரிக்கை உள்ளது. அதாவது நான் இறந்த பின்னர், எனது அசிங்கமான (அதாவது கவர்ச்சியான, கிளாமரான) புகைப்படங்களைப் பகிரவேண்டாம். எனது கடைசி ஆசையாக இதனை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனது அசிங்கமான புகைப்படங்களைப் பகிர்ந்தால், அது எனது மரணத்திலும் எனக்கு வலியைக் கொடுக்கும்” என பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X