திருமணமாகி 15 வருஷமா வீட்டுக்கு போகல.. 2 வருஷமா ஒரே சண்டை.. முனீஷ்காந்த் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கும். அப்படி காமெடி நடிகர்களின் தனித்த அடையாளத்தை கொண்டவர் தான் முனீஷ்காந்த். இவர் காமெடி நடிகிர் என்பதையும் தாண்டி குணச்சித்திர கேரக்டர்களிலும் மிரட்டி வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது முண்டாசுப்பட்டி படம் தான். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது. அந்த ஒரு படம் ரிலீஸ் ஆன பிறகு தான், மக்கள் என்னை கவனிக்க ஆரம்பிச்சாங்க என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
நடிகர் முனீஷ்காந்த்: அந்த படத்தை தொடர்ந்து, 'ஜிகர்தண்டா', 'ராட்சசன்', 'மாநகரம் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வரும் முனீஷ்காந்த், நடித்த மிடில் கிளாஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் முனீஷ்காந்த், தனது வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை மிகவும் நேர்மையாக பகிர்ந்திருக்கிறார். திருமணமாகி 15வருடம் சரியாக ஊருக்கு போக மாட்டேன். அதுமட்டுமில்லாமல், திருமணத்திற்கு முன்பு,"என்ன செய்யணும் என்று நான் தான் முடிவு பண்ணுவேன்... யாரிடமும் கேட்க மாட்டேன்... எனக்கு தோன்றியது நானே செய்வேன்..." என்று அவர் கூறுகிறார்.

2வருடம் ஒரே பிரச்சனை: ஆனால் திருமணத்திற்கு பிறகு,"இதை செய்யக்கூடாது... அதை செய்யக்கூடாது..." என்று மனைவி கேள்வி கேட்க ஆரம்பித்தபோது, "நீ எப்படி என்னை கேள்வி கேட்கலாம்?" என்ற எண்ணத்தில் பெரிய சண்டைகள் ஏற்படும். இப்படியே இரண்டு வருடங்கள், திருமண வாழ்க்கையில் கடுமையான மனப்போராட்டம் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். ஆனால், அதன் பிறகு, வாழ்க்கையில் சந்தித்த பல சிரமங்கள், தோல்விகள் அதிலிருந்து அவரை மீட்டது அவருடைய மனைவிதான். என் மனைவி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து சொல்லி புரியவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள். என்னை பற்றிய பல விஷயத்தை மாற்றி, ஒரு நல்ல புரிதலை வாழ்க்கையில் கொண்டு வந்ததே என் மனைவி தான். இதனால், மனைவியை சொல்வதை கேட்பது நல்லது என முனிஷ்காந்த் அந்த பேட்டியில் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











