குடிப்பழக்கம்.. வடிவேலு மீது அந்த ஆதங்கம் தான் இருக்கு.. ஓபனாக பேசிய முத்துக்காளை

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் பொதுவாகவே பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள மிகவும் கவனம் செலுத்துவார்கள். அப்படி ரசிகர்கள் பலரது கவனத்தை அவரது சொந்த வாழ்க்கை மூலம் ஈர்த்தவர் ஸ்டண்ட் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் முத்துகாளை குறித்துதான்.

அவர் குறித்து அண்மையில் வெளியான தகவல் பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது மதுவுக்கு அடிமையாக இருந்த அவர் கலா மாஸ்டரின் அறிவுரைக்கும் வேண்டுகோளுக்கும் பின்னர் மதுவை கை விட்டு விட்டதாகவும் அதன் பின்னர், மது அருந்துவதே இல்லை என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அவர் பேசுகையில், எனக்கு பலரும் அறிவுரை கூறினார்கள். அதன் பின்னர் ஒரு நாள் காலையில் மது அருந்தக் கூடாது என்று முடிவு எடுத்தேன். மதியம் அந்த முடிவை தீர்க்கமாக எடுத்தேன். அன்று மாலையில் இருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் மது இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.

Actor Muthukalai Recent Interview About His Alcoholic Habits And Vadivelu

சம்பளம்: அதேபோல் நடிகர் வடிவேலு குறித்து பலரும் பல கருத்துக்கள் கூறுகிறார்கள். நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் பணத்திற்காக யார் வீட்டு வாசலிலும் சென்று நின்றது கிடையாது. ஆனால் வடிவேலு அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து நடித்த எங்களைப் போன்ற நடிகர்களுக்கு சம்பளத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுக்கச் சொல்லி இருக்கலாம். அப்படி அவர் சொல்லி இருந்தால் எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கி இருப்பார்கள். நாங்களும் இன்றைக்கு சந்தித்து வரும் நிதி நெருக்கடிகள் இல்லாமல் இருந்து இருப்போம். ஆனால் அவர் அப்போது அப்படி செய்யவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது.

ஆதங்கமும் நன்றியும்: ஆனால் அவருடன் இணைந்து நடித்த படங்களால் தான் நான் இன்றைக்கும் நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் வடிவேலு குறித்து மற்ற நடிகர்கள் அதாவது அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர்கள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்த நிலையில் முத்து காளையின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X