தேவயானியும் நானும் பிரிய காரணம் என் மனைவியா? என்னத்த சொல்ல.. கடுப்பான நகுல்!

சென்னை: தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் மிக முக்கியமான நடிகை தேவயானி. பலரின் கனவுக்கன்னியாக வலம் வந்த அவர், இயக்குனர் ராஜகுமாரன் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

புகழின் உச்சத்தில் இருந்த நடிகை தேவயானி, ராஜகுமாரன் இயக்கிய 'நீ வருவாய்' என்ற படத்தில் பார்த்திபன், அஜித்துடன் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. இந்த படத்தின் போது தான் தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கு இடையில் காதல் மலர்ந்தது. படப்பிடிப்பில் ராஜகுமாரனின் அன்பும், அமையும், உழைப்பும் தான் அவரை வலுவாக கவர்ந்தது, அதுமட்டுமில்லாமல், அந்த படத்தில் வரும் ஒவ்வொரு காதல் வசனமும் மனதை தொடுவகையில் இருந்தது. இப்படி கூடவா ஒருவர் எழுத முடியும் என்று நினைத்தேன், மனதில் அப்படி காதல் இருந்தால் தான் அது வார்த்தையாக வரும் என்பதால், அவர் மீது தன மரியாதையும் காதலும் வந்தது. அவர் முதலில் காதலை சொன்ன போது, நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஆனால், காதலை வீட்டில் ஏற்றுகொள்ளவில்லை, இதனால், வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டோம் என்று நடிகை தேவயானி ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

நடிகை தேவயானி: தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது, இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். தேவயானி சில படங்களில் நடித்து வந்த போதும் பட வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் கால் பதித்தார். அதன்படி முதன்முதலாக கோலங்கள் என்ற சீரியலில் நடித்த தொடங்கினார். அந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு பிடித்த சீரியலாக இருந்தது.

Devayani Nakkhul
Photo Credit:

இந்நிலையில், நகுல் அண்மையில் அளித்த பேட்டியில், தேவயானிக்கும் தம்பிக்கும் சண்டை, ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டது நகுலுக்கு பிடிக்கவில்லை என்பதால், அக்காவை ஒதுக்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் கமெண்ட் பாக்ஸில் போடுவார்கள், அதுமட்டுமில்லாமல், என் மனைவி ஸ்ருது அக்காவையும் தம்பியையும் பிரித்துவிட்டார் என்றெல்லாம் சொல்லுவதை கேட்கும் போது, முதலில் கோவமாக வந்தது, இப்போது, அதை கேட்டால் என்னடா சீரியல் போல பேசுறீங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது என அந்த பேட்டியில் நகுல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X