twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைக்காக உயிர் போனால் போகட்டும்..பிரபல நடிகர் நளினிகாந்த் பேட்டி!

    |

    சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் நளினிகாந்த்.

    தற்போது முதியவர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் சியான்கள் என்னும் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

    சண்டைக்கு லீவ் போல.. கொடுத்து வச்ச போட்டியாளர்கள்.. ஒரே பரிசு மழை தான்.. களைகட்டிய கிறிஸ்துமஸ்! சண்டைக்கு லீவ் போல.. கொடுத்து வச்ச போட்டியாளர்கள்.. ஒரே பரிசு மழை தான்.. களைகட்டிய கிறிஸ்துமஸ்!

    அது குறித்தும், அவருடைய அனுபவங்களை குறித்தும் CloseCall நிகழ்ச்சிக்கு நடிகர் நளினிகாந்த் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

    சவாலான கதாபாத்திரம்

    சவாலான கதாபாத்திரம்

    சியான்கள் படத்தை பற்றி பேசிய நடிகர் நளினிகாந்த், தான் 100க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தில் நடித்தது சவாலாக இருந்ததாகவும், இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் நளினிகாந்த் வில்லன் அல்ல அவரும் ஒரு நடிகர் என்பதை உணர்வார்கள் என கூறினார்.

    சில்வர் ஜுபிலி விருது

    சில்வர் ஜுபிலி விருது

    எம். ஜி. ஆர் அவர்களின் நினைவு நாள் குறித்த கேள்விக்கு, எம். ஜி. ஆர் இன்னும் இறக்கவில்லை இந்த கலியுகம் முடியும் வரையில் அவருடைய உயிர் இந்த பூமியில் இருக்கும் எனவும், முந்தானை முடிச்சு படத்திற்காக எம். ஜி. ஆரிடம் சில்வர் ஜுபிலி விருது வாங்கியதை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

    நிறைய அம்சங்கள்

    நிறைய அம்சங்கள்

    சியான்கள் படத்தை ஏன் மக்கள் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு, இந்த படத்தை அனைவரும் பார்ப்பார்கள் என உறுதியளித்தார். சிட்டியில் உள்ளவர்கள் கிராமபுறங்களில் இப்படியும் இருக்குமா என பார்க்க கூடிய அளவிற்கு நிறைய அம்சங்கள் சியான்கள் படத்தில் உள்ளது என கூறினார்.

    படத்தின் ஹைலைட்

    படத்தின் ஹைலைட்

    சியான்கள் படத்தில் நடிகர் நளினிகாந்த் விபத்து காட்சி ஒன்றில் டூப் போடாமல் நடித்துள்ளார் அது குறித்து அவர் கூறியதாவது, கலைக்காக உயிர் போனால் போகட்டும் அது எனக்கு பெருமை எனவும், சியான்கள் படத்தில் அந்த காட்சி முக்கியமான ஹைலைட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

    English summary
    Actor Nalinikanth Interview,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X