Exclusive: மணிரத்னம் சாரோட பயோபிக்ல நடிக்கணும்.. ‘V’ பட ரிலீஸை முன்னிட்டு நானி சிறப்பு பேட்டி!

சென்னை: நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'V' இன்று உலகம் முழுவதும் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

Recommended Video

ACTOR NANI EXCLUSIVE | MANI RATNAM SIR தான் என்னோட ONLINE TEACHER |V MOVIE | FILMIBEAT TAMIL

தியேட்டர்கள் திறக்க தொடர்ந்து கால தாமதம் ஆகி வருவதால், பல பெரிய நடிகர்களின் படங்களும் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.

இயக்குநர் மோகன கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதிர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் மற்றும் ஜகபதி பாபு நடிப்பில் உருவாகி உள்ள 'V' படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகி ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பு பேட்டி

சிறப்பு பேட்டி

அமேசான் பிரைமில் ரிலீசாகி உள்ள ‘V' படம் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன் நடிகர் நானி மற்றும் சுதிர் பாபு அளித்த பேட்டி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 'V' படம் குறித்தும், ஒடிடி ரிலீஸ் பற்றியும், பவன் கல்யாண் ரசிகர்கள் மரணம் தொடர்பாகவும் விரிவாக இந்த பேட்டியில் நடிகர் நானி பேசியுள்ளார்.

தியேட்டர் ரிலீஸை மிஸ் பண்றீங்களா?

தியேட்டர் ரிலீஸை மிஸ் பண்றீங்களா?

பொதுவா பெரிய ஹீரோக்கள் படங்களை தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸில் பார்ப்பது தான் ரசிகர்களுக்கும், அந்த பிரபல நடிகர்களுக்கும் பிடித்த விஷயம். தியேட்டர் ரிலீஸை மிஸ் பண்றீங்களா என்ற கேள்விக்கு, நிச்சயமாக, ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ். காலத்தின் கட்டாயத்தாலே இப்படி ஒடிடியில் ரிலீஸ் செய்கிறோம். அடுத்த படம் நிச்சயம் தியேட்டர் கொண்டாட்டம் தான் என்றார் நானி.

‘V’ டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

‘V’ டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

வெறும் ‘V' என்று மட்டுமே இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த ‘V'க்கு என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு? எல்லாரும் அது ஹீரோவின் பெயர் என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்த ‘V' தான் கதைக் கருவே, நிச்சயம் படத்தை முழுசா பார்த்தால் தான் அந்த டைட்டிலுக்கு அர்த்தம் புரியும் என்றார்.

பவன் கல்யாண் ரசிகர்கள் மரணம் பற்றி

பவன் கல்யாண் ரசிகர்கள் மரணம் பற்றி

செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட்ட டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 8 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து என்ன நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு, ரசிகர்களின் அன்பு தான் ஒவ்வொரு நடிகரையும் பிரபலமாக்குகிறது. ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிக்காட்ட இதுபோன்ற விஷயங்களை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறந்தநாள் அதுவுமா பவன் கல்யாணின் மனம் எப்படி நொறுங்கி போயிருக்கும் என்பதை நாம் இங்கே யோசித்து பார்க்க வேண்டும். என் ரசிகர்கள் என் படத்தை பார்த்தால் மட்டுமே எனக்கு போதுமான ஒன்று, வேறு எந்த நேரத்தையும் எனக்காக வீணடிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

சினிமாவில் உங்க ஆசிரியர் யார்?

சினிமாவில் உங்க ஆசிரியர் யார்?

ஆசிரியர் தினமான இன்று ‘V' படம் ரிலீஸ் ஆகி உள்ளதே? உங்களுக்கு சினிமாவில் யார் ஆசிரியர் என்ற கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல் இயக்குநர் மணிரத்னம் தான் தனது சினி உலக ஆசிரியர் என நடிகர் நானி கூறியுள்ளார். அவருடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், ஆன்லைன் வகுப்பு ஆசிரியர் போல அவர் எனக்கு என புன்னகைத்தார்.

யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?

யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?

பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த பிசியான ஷெட்யூலிலும் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு நடிகர் நானி பேட்டி கொடுத்துள்ளார். அவரிடம் இந்த பயோபிக் சீசனில் யாருடைய பயோபிக்கில் நடிக்க உங்களுக்கு ஆசை என்ற கேள்வி முன் வைக்கப்பட, அதற்கும் சற்றும் தயங்காமல் இயக்குநர் மணிரத்னத்தின் பயோபிக்கில் நடிக்கவே தனக்கு ஆசை என்று கூறியுள்ளார்.

நடிகர் நானியின் ‘V' மூவியை வீட்டுத் தியேட்டரான அமேசான் பிரைமில் குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள், இந்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியையும் பார்த்து நானி தரிசனத்தை பெறுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X