அவ உக்காந்து இருந்தா.. நான் அப்படி நெனச்சி கல்யாணம் பண்ணேன்.. 27 வருஷமாச்சு.. நெப்போலியன் பேட்டி!

சென்னை: தமிழ் திரையுலகின் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக பிரபலமானவர் நெப்போலியன். 1991 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான அவர், தனது கம்பீரமான தோற்றத்தாலும் வித்தியாசமான நடிப்பாலும் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

திரையுலக அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த நெப்போலியன், சினிமாவிற்கு பிறகு அரசியலிலும் திறம்பட செயர்லபட்டு திமுக சார்பில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். இதையடுத்து, 1993ம் ஆண்டு நெப்போலியன் ஜெயசுதாவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூத்த மகன் தனுஷ், இளைய மகன் குணால். இவர்களில் மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோய் என்ற அரிய மற்றும் சிகிச்சைக்கடினமான நோயால் பாதிக்கப்பட்டதால், அவரது சிகிச்சைக்காக நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்.

Napoleon interview
Photo Credit:

நெப்போலியன் பேட்டி: தனுஷுக்கு அமெரிக்காவில் அவ்வப்போது சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களின் திருமணம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிக விமரிசையாக நடந்தது. இந்நிலையில், நெப்போலியன் touring talkies யூடியூப் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

27 வரும் ஆச்சு: அதில், என் மனைவி ஜெயசுதா ரஜினியின் ரசிகை, நான் ரஜினி படத்தில் வில்லனாக நடித்ததால் என்னை திருமணம் செய்து கொள்ளலாமா? என முறை யோசித்தேன். அதன் பிறகு தான் சரி பரவாயில்லை என்று திருமணத்திற்கு சம்மதித்தேன் என அடிக்கடி சொல்லுவாள். உடனே நான், பெண் பார்க்க வரும்போது, நீ உக்கார்ந்திருந்ததால் உயரமா தெரிந்த, அதனால் தான், நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் என இருவரும் அடிக்கடி தமாஷாக இப்படி பேசிக் கொள்வோம். ஆனால் நல்லபடியாக எனக்கு ஒரு மனைவி அமைந்திருக்கிறாள். எனக்கும் ஜெயசுதாவிற்கும் திருமணம் நடந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரைக்கும் எனக்கும் அவளுக்கும் எந்தவிதமான சண்டையோ சச்சரவோ வந்தது இல்லை. இருவரும் நல்ல மன பொருத்தத்தோடு, குழந்தைகளுக்காக அமெரிக்காவுக்கே சென்ற செட்டில் ஆகி நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நெப்போலியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X