நெப்போலியனின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா?.. அவருக்கு இந்த பெயரை வைத்த பிரபலம் யாரு தெரியுமா?

சென்னை: பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது வீடியோக்களின் வியூஸ் குறைந்து விட்டால் உடனே நெப்போலியனை சந்தித்து ஒரு வீடியோவுடன் வந்து விடுகிறார் என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு நடிகர் நெப்போலியனின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார். அமெரிக்காவில் உள்ள நெப்போலியன் வீடு முதல் அனைத்தையும் ரசிகர்களுக்கு காட்டிய இர்ஃபான் தற்போது எடுத்த பேட்டியில் மேலும், பல சுவாரஸ்ய தகவல்களை நெப்போலியன் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர் ஒருவருக்கு பிஏவாக இருந்த நெப்போலியனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் ஆசை வந்ததே நாகார்ஜுனா நடித்த உதயம் படத்தை பார்த்து தானாம். அவருக்கு நெப்போலியன் என்கிற சரியாக பொருந்தக் கூடிய பெயரை வைத்த அந்த பிரபலம் யாரு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..

Actor Napoleon reveals who changed his name in a recent Irfan Views interview


நெப்போலியன் பெயரை மாற்றிய பிரபலம்: நாகார்ஜுனா எல்லாம் நடிக்கிறார் அவரை போலத்தான நீயும் வாட்ட சாட்டமா ஹைட்டா இருக்குற நீயும் சினிமாவில் நடிக்கலாம்ல என அரசியல் தலைவர் ஒருவரிம் பிஏவாக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கே வந்த நண்பர் ஒருவர் சொன்னார். அதன் பின்னர் அவர் தான் பாரதிராஜாவிடம் என்னை அழைத்துக் கொண்டு போனார். என்னோட பெயர் குமரேசன் என சொன்னதும் உன்னோட தோற்றத்துக்கு குமரேசன் பெயர் செட்டாகலையேன்னு யோசிச்ச அவர் மேலையும் கீழையும் உத்துப் பார்த்துட்டு நெப்போலியன் என பெயர் வைத்தார். அவர் வைத்த பெயர் தான் இன்னமும் எனக்கு எல்லா துறைகளிலும் வெற்றிகளை பெற்றுத் தருகிறது என நெப்போலியன் தனது புதிய பேட்டியில் கூறியிருக்கிறார்.

அரசியலுக்கு ஏன் முழுக்குப் போட்டேன்: சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே என் குழந்தைகள் அப்பாவை எப்போதும் பார்க்கவே முடியாதா என ஃபீல் பண்ணாங்க, அவங்களை வெளிநாட்டில் விட்டு விட்டு தமிழ்நாட்டில் நான் அரசியல் செய்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் குழந்தைகளுக்காக இங்கே அடிக்கடி வந்து போக நேர்ந்தது. குழந்தைகள் தொடர்ந்து ஃபீல் பண்ணதை பார்த்து மனசு கேட்கல, அப்புறம் எனக்கும் இங்கே சிட்டிசன்ஷிப் வாங்கிக் கொடுத்துட்டாங்க.. அதனால் தான் சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டு விட்டு குழந்தைகளுடன் நேரத்தை அதிகம் செலவிட்டு வருகிறேன் என நெப்போலியன் தனது புதிய பேட்டியில் இர்ஃபான் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மன்னர் போல வாழுறாரு: வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆன நெப்போலியன் அங்கேயும் அரசியல், பிசினஸ், சினிமா என கிடைக்கும் வாய்ப்புகளை பெற்று கலக்கிய நிலையில், அதிகளவில் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு மன்னர் போல வாழ்ந்து வருகிறார். அவருக்கு இனிமேல் அவரோட மகன்கள் தான் உலகம் என மற்ற வேலைகளை தூக்கி எறிந்து விட்டு குடும்பத்துடன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ வேண்டும் என முடிவெடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சில நடிகர்கள் சினிமாவே கதியென 70, 80 வயதை கடந்தும் உழைத்து வரும் நிலையில், சொந்த வாழ்க்கைக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவிடும் நெப்போலியனும் சிந்தனையும் உழைக்கும் போது உழைத்து விட்டு அதை கொண்டாட கொஞ்ச ஆண்டுகள் ஜாலியாக குடும்பத்துடன் என்ஜாய் பண்ண வேண்டும் என்பதை நெப்போலியனை பார்த்து கற்றுக் கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X