Akshaya: தனுஷ் முன்னிலையில் கண்கலங்கிய அக்ஷயா.. கலங்கவைத்த சுஹாசினி.. என்னதான் நடந்தது?

டோக்கியோ: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு நேற்று முன்தினம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் தமிழ்நாட்டில் இருந்து திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அநத வகையில், நடிகர்கள் கார்த்தி, மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் ஜப்பானில் நடைபெற்ற இந்த திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களால் இந்த திருமணம் மிக சிறப்பாக களைகட்டியது. இந்நிலையில் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் இணைந்து முதல் முறையாக பேட்டியளித்துள்ளனர்.

nepoleon dhanoosh akshaya

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மற்றும் நெல்லையை சேர்ந்த அக்ஷயாவின் திருமணம் கடந்த 7ம் தேதி சிறப்பான வகையில் வெகு விமரிசையாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் மீனா, குஷ்பூ, கார்த்தி, ராதிகா சரத்குமார், பாண்டியராஜன், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற நிலையில் இந்த திருமணம் சர்வதேச அளவில் அதிகமான கவனத்தை பெற்றுள்ளது. தசை சிதைவு நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்ட தனுஷிற்கு இந்த திருமணம் சாத்தியமா என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

களைகட்டிய திருமண விருந்து: ஆனால் இந்த திருமணத்தை தான் சாத்தியப்படுத்தி காட்டுவேன் என்று தனுஷ் முன்னதாக நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் பேசி இருந்தார். அந்த வகையில் அவரது திருமணம் ஊரே மெச்சும்வகையில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் என அடுத்தடுத்த சிறப்பான ஏற்பாடுகளால் மாஸ் காட்டிவிட்டார் நெப்போலியன். இதேபோல இந்த திருமணத்தின் விருந்து உபச்சாரத்தை வந்திருந்த விருந்தினர்கள் மெச்சி பேசினர். செட்டிநாட்டு உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய உணவுகள் இந்த திருமண விருந்தில் இடம் பெற்றிருந்தன.

கண்கலங்கிய அக்ஷயா: இந்த திருமணத்தின்மூலம் ஜப்பானையே தமிழ்நாடாக மாற்றி காட்டியுள்ளார் நெப்போலியன். இந்நிலையில் தற்போது திருமணம் முடிந்து தன்னுடைய கணவர் தனுஷுடன் இணைந்து அக்ஷயா முதல் முதலில் பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியை நடிகை சுஹாசினி எடுத்துள்ளார். அடுத்தடுத்த கேள்விகளால் தனுஷ் மற்றும் அக்ஷயாவை அவர் துளைத்தெடுத்ததை பார்க்க முடிந்தது. தன்னுடைய குடும்பத்தினர் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அக்ஷயா ஒரு கட்டத்தில் அவர்களை பிரிய உள்ளது குறித்து நினைத்து கண்கலங்கினார். தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் தான் மிஸ் செய்வேன் என்றும் குறிப்பாக தன்னுடைய அக்கா மகளை தான் அதிகமாக மிஸ் செய்வேன் என்றும் அக்ஷயா இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

முதல் சந்திப்பு: தொடர்ந்து தான் தனுஷுடன் முதன் முதலில் தொலைபேசி மூலம் பேசியது மற்றும் அவரை முதன்முதலில் நேரில் சந்தித்தது உள்ளிட்ட விஷயங்களையும் இவர்கள் இருவரும் இணைந்து பேசினர். இந்த திருமணம் நிச்சயம் ஆனதும் தன்னுடைய அம்மாவிடம் இதுகுறித்து அதிகமாக பேசியதாக தனுஷ் கூறியநிலையில், இரு அம்மாக்களுடனும் தான் திருமணம் குறித்து அதிகமாக பேசியதாக அக்ஷயா கூறியுள்ளார். நீண்ட நாட்கள் போன் மூலமாகவே பேசிக் கொண்டிருந்த நிலையில், நேரில் பார்த்தபோது மிகப்பெரிய உற்சாகம் ஏற்பட்டதாக தனுஷ் தெரிவித்துள்ளார். அக்ஷயாவோ, முதலில் பதற்றமாகவும் பின்பு மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X