அஜித்துடன் மட்டும் நடிக்க மாட்டேன்.. நெப்போலியனின் மனம் திறந்த பேட்டி !

சென்னை : தமிழில் முன்னணி நடிகராக மிகப் பிரபலமாக நடித்து வந்த நடிகர் நெப்போலியன் தற்போது ஹாலிவுட் படங்களிலும் கலக்கி வருகிறார்.

பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு நடிகர் நெப்போலியன் தற்போது பல பேட்டிகளில் தோன்றி தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நெப்போலியன் தற்போது பிரபல சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அஜித்துக்கு வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன் என மனம் திறந்து பேசியுள்ளார்.

சுப்ரமணியபுரம் ரிலீஸாகி 12 வருடம்.. இந்த நாளை எப்படி மறக்க முடியும்..? சசிகுமார் டச்சிங் போஸ்ட்!

மக்கள் மனதில்

மக்கள் மனதில்

ஆறடி உயரம் கட்டுக்கோப்பான உடலமைப்பு பார்க்கவே கம்பீரமான ஆண்மகன் போன்று வாட்டசாட்டமாக இருப்பவர் நடிகர் நெப்போலியன். இவர் தமிழில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் மிகவும் பிரபலமானவர்.

ஹாலிவுட் படங்களிலும்

ஹாலிவுட் படங்களிலும்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நெப்போலியன் தற்பொழுது ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்திய நடிகர்களை ஹாலிவுட் படங்களில் அவ்வளவாக பயன்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுந்து வரும் நிலையில் தற்போது நடிகர் நெப்போலியன் ஹாலிவுட்டிலும் தனது கொடியை பறக்கவிட்டு வருகிறார்.

கதாநாயகனாகவும்

கதாநாயகனாகவும்

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நெப்போலியன் கதாநாயகனாகவும் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் இன்றளவும் பலரால் பேசப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இந்த நிலையில் இப்போது கொரானா நோய்த்தொற்றின் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் பல சேனல்களும் திரைப்பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் நெப்போலியன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் போன்ற அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்த விட்டதாகவும் இன்னும் அஜீத்துடன் மட்டும் இணையவில்லை என தெரிவித்திருந்தார்.

வில்லனாக மட்டும்

வில்லனாக மட்டும்

ஒருவேளை அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் ஆனால் அஜித்துக்கு வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன். என தல அஜித்தின் மீது இவர் கொண்டிருக்கும் மிகப்பெரிய நன் மதிப்பைப் பற்றி பூரித்து அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் நெப்போலியன் கூடிய விரைவிலேயே அஜித் படத்தில் இணைவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வந்திருக்க முடியாது

வந்திருக்க முடியாது

தமிழ் திரைப்படத்துறையில் நெப்போடிசம் என்று ஒன்று இருக்கிறதா என பல முறை பல பேர் கேட்டதற்கு, தமிழ் திரைப்படத்துறையில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை அப்படி இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் தற்போது மிகப்பெரிய நடிகர்களாக வந்திருக்க முடியாது என்று சிம்பிளாக சொல்லி முடித்தார் .

தட்டிப் பறிப்பதும்

தட்டிப் பறிப்பதும்

தமிழ் திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் வாரிசுகள் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் எந்த ஒரு வளரும் நடிகர்களின் வாய்ப்புகளையும் தடுப்பதும் இல்லை தட்டிப் பறிப்பதும் இல்லை. அவ்வாறு நடிக்க வரும் வாரிசு நடிகர்கள் தங்களின் சொந்தத் திறமையால் மட்டுமே முயன்று முன்னேறி வருகின்றனர் என தமிழ் திரையுலகில் நெப்போடிசம் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X