3 நாள் பட்டினி.. பணம் தான் முக்கியம்.. என்னோட உலகமே இவங்க தான்.. பார்த்திபன் பேட்டி!

சென்னை: இயக்குநரும் நடிகருமான பார்த்திபனுக்கு என்று தமிழ் சினிமாவில் எப்போதும் தனி பாதையை தேர்ந்தெடுத்தவராக விளங்குகிறார். தன் படைப்புகளில் எப்போதும் ஒரு வித்தியாசத்தைத் தேடி, அதனை நுட்பமான முறையில் கதைகளிலும் காட்சிப்படுத்தும் வகையிலும் வலுவாக கொண்டு வருகிறார். எந்த ஒரு விஷயத்தையும் சாதாரணமாகச் சொல்லாமல், தனக்கே உரிய பாணியில் அதில், அழகும் நயமும் சேர்த்துக்கொள்ளக் கூடியவர் பார்த்திபன்.

அண்மையில் சினி உலகம் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் பார்த்திபன் பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அண்மையில் நான் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் எடுத்திருந்தேன். அதில். நான் என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அதையெல்லாம் படத்தில் அழகாக சொல்லி இருந்தேன். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்துவிட்டது. ஏன் தோல்வி அடைந்தது என்று தெரியாமல், பலமுறை அந்த திரைப்படத்தை நான் போட்டு பார்தேன். ஆனால், என்ன பிரச்சனை என்று என்னால் கண்டுபிடிக்கவே. இதனால் இனி ஏதாவது ஒரு கதையை தொடுவதற்கு எனக்கு பயமாகவே இருக்கிறது. இந்த பயம் புதிய பாதை படம் எடுக்கும் போது எனக்கு இல்லை.. ஏனென்றால், சினிமா உலகில் வெற்றி பெற்றவர்களையும் மட்டும் தான் உலகம் கொண்டாடும், தோற்று விட்டால் அவர்களை அப்படியே ஓரம் கட்டி விடும். இதுவரை 5 தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டேன், எந்த பதிலும் இல்லாததால் நானே இனி தயாரிக்கப்போகிறேன்.

Parthiban interview

பார்த்திபன் பேட்டி: நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை, அதே சினிமாவில் நான் போடுகிறேன். அதற்காகத்தான் நடிக்கிறேன். எனக்கு பணம் மிகவும் முக்கியம், ஆரம்ப காலத்தில் குடும்பத்தின் வறுமையால் மூன்று நாள் சாப்பிடாமல் இருந்து இருக்கிறேன். வெறும் டீயை மட்டுமே குடித்துக்கொண்டு வாழ்ந்து இருக்கிறேன். இதுபோல கஷ்டப்பட்ட எனக்கு பணம் என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இந்த 35 வருடத்தில் பல கோடிகளை பார்த்துவிட்டேன். என்னிடம் வரும் பணம் அப்படி செல்லும், இப்படி செல்லும். ஆனால், என்னிடம் தங்கியதே இல்லை. ஏனென்றால் நான் படம் எடுக்க ஆரம்பித்து விட்டேன். பணம் மட்டுமே சந்தோஷம் இல்லை, சினிமாவால் கிடைக்கும் வெற்றியின் மூலம் வரும் சந்தோஷத்தை பணத்தால் தரமுடியாது. அந்த சந்தோஷம் வரவேண்டும் என்றாலும் பணம் தேவை என்பதால், எனக்கு பணம் மிகவும் அவசியம்.

கடைசி வரை நடிப்பேன்: என்னைப்போலவே என் குழந்தைகளும் இருக்கிறார்கள். என் 3 குழந்தைகள் தான் என் உலகம். சினிமாவிற்கு பின் அவர்கள் தான் என்னுடைய உலகம் அவர்தகள் தான். அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும். இதில், என் மகள் இயக்குனர், மகன் இயக்குநர், மருமகன் இயக்குனர் அனைவருமே இயக்குனர் ஆவதற்கான முயற்சியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே என்னை போல ஒரு ரிஸ்க் எடுக்கும் முயற்சிகள் இருக்கிறார்கள். இதனால், நாங்கள் அனைவரும் சேர்ந்து ரிஸ்க் எடுக்கிறோம். இந்த சினிமா தொழில் எவ்வளவு சுவாரஸ்யமானது என்பது, அவர்களுக்கும் தெரிந்ததால் நான் எடுக்கும் ரிஸ்கிற்கு அவர்களும் துணையாக இருக்கிறார்கள். மூன்று பேருமே மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். நாளை நம்முடைய பிழைப்பிற்கு என்னடா செய்வது என்று யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, என்னிடம் நடிப்பு இருக்கிறது. நான் படத்தை இயக்கவில்லை என்றால் நடிப்பேன். என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை நடிப்பேன் என்று பார்த்திபன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: parthiban
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X