சீதாவை பிரிந்ததில் சந்தோஷம்.. இரண்டாம் திருமணம் குறித்து பேசிய பார்த்திபன்!
சென்னை: புதியபாதை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக பார்த்திபன் அறிமுகமானார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த நிலையில்,12 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் சீதா சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். அதே போல பார்த்திபனும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பார்த்திபன், நான் சீதாவை பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை. சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். சீதாவுடன் வாழ்ந்த அந்த 12 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் இனிமையானவை. எது நடந்ததோ அது என் வாழ்க்கையில் நன்றாகவே நடந்தது. ஆனால், இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இப்ப இருக்கும் காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் இருவருக்குமே திருமணத்தை விட சுதந்திரத்தை பெரிதாக நினைக்கிறார்கள். எந்த பெண்களுமே திருமணம் என்ற பெயரில் ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை, அனைவருமே சுதந்திரமாக அவர்களுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.

என்றும் என் மனைவி சீதா தான்: இப்பொழுது நான் நினைப்பது என்னவென்றால் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்திருந்தால் அதை 12 வருடமாக இழுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை இன்னும் கொஞ்சம் முன்பாகவே முடிவு செய்து பிரிந்து இருக்கலாமே என்று தான் நான் நினைக்கிறேன். இருவரும் பிரிந்து இருக்கிறோமே தவிர குழந்தைகளின் திருமண விஷயத்தை இருவரும் சேர்ந்துதான் முடிவு எடுத்தோம். இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. மனைவி என்கின்ற ஸ்தானம் என்றும் அவருக்கு மட்டும் தான். என்னுடைய மீதி வாழ்க்கை சினிமாவில் மட்டும் தான் இருக்குமே தவிர திருமண வாழ்க்கையில் இருக்காது. இதை நான் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன் மீண்டும் இந்த பேட்டியின் மூலமாக அனைவரிடமும் சொல்லிவிடுகிறேன்.
சமூதாயத்தின் மீது பயம்: விவகாரத்து என்பது இப்பொழுது மிகவும் எளிமையாகி விட்டது. ஆறு மாதங்களிலேயே விவகாரத்து கேட்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே ஒத்து வராது என தெரிந்த பிறகு எதற்காக போராடிக் கொண்டு இருக்க வேண்டும். முன்பெல்லாம் இந்த சமுதாயம் என்ன சொல்லுமோ என்கின்ற பயம் இருந்தது. ஆனால், இப்போது இந்த சமுதாயத்தின் மீது பயம் குறைந்துவிட்டது இந்த சமுதாயத்திற்காக நான் வாழ வேண்டுமா? இல்லை எனக்காக நான் வாழ வேண்டுமா என கேள்வி வந்துவிட்டது என பார்த்திபன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











