twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மம்முட்டியிடம் வராத பயம் தனுஷ், சமுத்திரக்கனியைப் பார்த்ததும் வந்தது: பாவல் நவகீதன்

    வடசென்னை படத்தில் பயத்துடன் நடித்ததாகக் கூறுகிறார் பாவல் நவகீதன்.

    |

    சென்னை: தனுஷ் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்து, வடசென்னைப் படத்தில் பயத்துடன் நடித்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகர் பாவல் நவகீதன்.

    பிரம்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மெட்ராஸ், மகளிர் மட்டும் என அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து வருபவர் பாவல் நவகீதன். இவர் தற்போது வடசென்னை படத்தில் சிவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    வடசென்னையில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த போது தனுஷ் மற்றும் சமுத்திரக்கனியை பார்த்து பயந்ததாக கூறுகிறார் பாவல் நவகீதன்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது,

    நடிக்க வாய்ப்பு:

    நடிக்க வாய்ப்பு:

    "லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும் போது 'குற்றம் கடிதல்' படத்தின் இயக்குநர் பிரம்மாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் குற்றம் கடிதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'மெட்ராஸ்' படத்தில் விஜி என்ற கதாபாத்திரமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

    இயக்குநராகும் ஆசை:

    இயக்குநராகும் ஆசை:

    படங்களில் நடித்தாலும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் அப்படியே இருந்ததால் ஒரு படம் இயக்கவும் செய்தேன். ஆனால் இரண்டு மாதத்தில் படம் பாதியில் நின்று விட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு படத்தை இயக்கி முடித்தேன்.

    திரில்லர் படம்:

    திரில்லர் படம்:

    அப்படத்தில் நான் நடிக்கவில்லை. கதாநாயகன் கேஸ்ட்ரோ அருண். இவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மலையாளத்தில் சுமார் 15 படங்களில் நடித்த விஷ்ணுப்ரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது ஒரு திரில்லர் படம்.

    வெற்றிமாறன் மீது நம்பிக்கை:

    வெற்றிமாறன் மீது நம்பிக்கை:

    இதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் நடித்தேன். அப்படமும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில், வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கதையைப் பற்றியும், எனது கதாபாத்திரத்தைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் சார் மீது நம்பிக்கை இருக்கிறது.

    ரஞ்சித் பாராட்டு:

    ரஞ்சித் பாராட்டு:

    எனது நடிப்பைப் பார்த்து எனது கதாபாத்திரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். மேலும், வெற்றி மாறன் சார் என்னிடம் படம் இயக்குவதை பிறகு பார்த்துக் கொள். நடிப்பு உனக்கு நன்றாக வருகிறது என்று ஊக்குவித்தார். இதற்கு முன் பிரம்மா சாரும், ரஞ்சித் சாரும் இருவருமே என்னை பாராட்டியிருக்கிறார்கள். ஆகையால், இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

    மம்முட்டியுடன் பேரன்பு:

    மம்முட்டியுடன் பேரன்பு:

    வடசென்னையில் பவனுக்கு தம்பியாக 'சிவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியாது. மம்முட்டி சாருடன் 'பேரன்பு' படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்திற்காக காத்திருக்கிறேன்.

    தனுஷைப் பார்த்து பயம்:

    தனுஷைப் பார்த்து பயம்:

    மம்முட்டி சாருடன் நடிக்கும்போது கூட பயம் வரவில்லை. வடசென்னை குழுவுடன் சேர்ந்து நடிக்கும்போது பயத்துடன் தான் நடித்தேன். ஏனென்றால், தனுஷ் சாரும், சமுத்திரக்கனி சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கான வசனம் கொடுக்கப்படும். அவர்களும் அதைப் படித்து விட்டு எளிமையாக நடித்துவிடுவார்கள். இனிமேல் நீயும் இந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் என்னை ஊக்குவித்தார்கள்", என அவர் கூறினார்.

    English summary
    “While working with the entire team of Vada Chennai, it was a complete different world. Everyone was so much experienced. The scene and dialogue papers would be given only on the sets and there was no time for home work or preparations. While Dhanush sir and Samuthirakani sir would give their performances in ease, I would be little afraid", says actor Pavel Navageethan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X