சிறுவயதில் ரப்பர் திருடுவேன்.. நான் ஒரு குறும்புக்கார பையன்.. நடிகர் பிரேம் பேட்டி !
சென்னை : நான் சிறுவயதில் ரப்பர் திருடுவேன், நண்பர்கள் தலையில் ஜூவிங்கம் ஒட்டிவிட்டு ஓடி விடுவேன் என்று நடிகர் பிரேம், சிறுவயதில் நான் செய்த குறும்புகளை பகிர்ந்தார்.
நடிகர் பிரேம் முக்கியமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக விக்ரம் வேதா இவரின் படங்களில் தனித்துவம் வாய்ந்த படமாகும். இந்த படத்தில் இவர் நடித்த சைமன் கதாபாத்திரம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்போது இவரின் மகனான கௌசிக்கும் அடுத்த சாட்டை படத்தின் மூலம் நடிகராகி இருக்கிறார்.

நடிகர் பிரேம் சமீபத்தில் சர்கார், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களில் நடித்து இருந்தார். இவர் அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் பிரேம் படங்களை தாண்டி ஆரம்ப கட்டங்களில் நாடகத்தில் நடித்து வந்தார். இவர் சமுத்திரகனி இயக்கி பாலசந்தர் தயாரித்த நாடகமான அண்ணி நாடகத்தில் நடித்து வந்தார். இதன் பின் அண்ணாமலை நாடகத்தின் மூலம் இவருக்கு சினிமாக்கான வாய்ப்பு கிடைத்தது .

அண்மையில் பிரேம் ஒரு நேர்காணலின் போது தான் செய்த பல குறும்புகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் சிறுவயதில் ஒரு முறை ரப்பர் திருடியிருக்கிறேன் என்ற உண்மையை பகிர்ந்து இருந்தார். மேலும் சக நண்பர்கள் மண்டையில் ஜுவிங்கத்தை ஒட்டியெல்லாம் விளையாடி இருக்கிறேன் என்று நகைச்சுவையுடன் கூறினார் .

பள்ளி பருவத்தில் பல நேரங்களில் பல குறும்புகளை செய்துள்ள பிரேம், அடிபட்டதாக பொய் சொல்லி பல நேரங்களில் பள்ளியை கட் செய்து வீட்டுக்கு சென்று விடுவாராம்.

நடிகர் பிரேம் அடுத்தபடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் விஜயுடன் நடித்த சர்கார் படத்தில் பெரிய கதாபாத்திரம் இவருக்கு கிடைக்கவில்லை. மாஸ்டர் படம் லோகேஷ் கனகராஜின் படம் என்பதால் இவருக்கு சிறந்த கதாபாத்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications











