Premgi: காதலை ஏற்கவில்லை..வீட்டில் பல பிரச்சனை.. உறுதியாக இருந்து பிரேம்ஜியை கரம் பிடித்த இந்து!
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜிக்கு அண்மையில் திருத்தணி முருகன் கோயிலில் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது க்யூட்டான தம்பதிகளாக இருக்கும் இவர்கள் இணையத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.தற்போது பிரேம்ஜியின் மனைவி இந்து முதன்முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு காதல் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
நான் சேலத்துல இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னையில் பேங்கில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது தான், பிரேம்ஜியை பார்த்தேன் அதுக்கப்புறம் இன்ஸ்டாகிராமில் பேசி காதலிக்க ஆரம்பித்துவிட்டோம். நாங்கரெண்டு வருஷமா காதலிச்சிட்டு இருந்தோம், இது அவரோட ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாத்துக்குமே தெரியும். நாங்க வெளியில போயிருக்கோம். ஆனா யாருமே எங்களை கண்டுபிடிச்சதே இல்ல, பிரேம்ஜி முரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு இருந்ததால அவரு மேல ரசிகர்கள் ரொம்ப நம்பிக்கை வைத்ததால எங்களுடைய லவ் ரெண்டு வருஷமா யாருக்குமே தெரியல.

எங்க வீட்டில் ஒத்துக்கல: கல்யாணம் என்று வரும்போது எங்க வீட்ல ரொம்ப பிரஷர் இருந்தது. சினிமா ஃபேமிலி வேண்டாம்னு சொன்னாங்க, காதலிச்சா ஒரு குடும்பத்தில் என்னென்ன பிராப்ளம்ஸ் நடக்குமோ அது எல்லாமே நடந்தது. ஆனால் நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று உறுதியாக இருந்தோம். நான், உறுதியாக இருந்ததால், வேறு வழி இல்லாமல் எங்க வீட்டில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இப்போ எங்க குடும்பத்தில் அனைவருக்கும் இவரை ரொம்ப பிடித்துவிட்டது என்றார்.
அம்மா கொடுத்த ஐடியா: தொடர்ந்து புதிய தொடங்கி உள்ள பிரேம்ஜி மாமியார் மசாலா குறித்து பேசிய அவர், எனக்கு பிசினஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனா எந்த பிசினஸ் பண்றது என்கிற ஐடியா இல்ல, அப்போ தான் அம்மா மசாலா பிஸ்னஸ் பத்தி சொன்னாங்க. உடனே நானும், இதுவும் மக்களுக்கு தினமும் தேவைப்படும் பொருள்தான் என்று ஓகே இதை பண்ணலாம் என்று முடிவு செய்தோம். ஆனா மசாலா பிஸ்னஸ் செய்கிறோம் என்றதும் பல பேர் இதே கேவலமா பாத்தாங்க.
பிரேம்ஜி மாமியார் மசாலா: இந்த மசாலாக்கு பிரேம்ஜிஸ் மாமியார்மசாலா அப்படின்னு பேர் வைக்கிறதுக்கு காரணம் என்னுடைய கணவர் தான். மசாலாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிச்சிட்டு இருந்தோம் அப்புறம் பிரேம்ஜிஸ் மாமியார் மசாலானு பெயர் வைத்தா எப்படி இருக்கும் என்று இன்ஸ்டாகிராம்ல நாங்க போஸ்ட் பண்ணோம். அதுக்கு நிறைய லைக்ஸ் வந்ததால், இதே பேரா வைத்துவிட்டோம். இந்த தொழிலில் நான் இறங்க,இதுக்கு என்னுடைய கணவர் பிரேம்ஜி பக்க பலமாக இருக்காரு, இணையத்தில் பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் வரும்போதும், நான் கொஞ்சம் டல்லாகி உட்காரும்போதும் அவர் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டே இருக்காரு என்று இந்து அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











