twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "சிம்புகிட்ட போகாதீங்க.. பாடிக்கொடுக்கமாட்டார்னு சொன்னாங்க" - நடிகர் பிருத்விராஜன் பேட்டி #Exclusive

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    மகனை நினைத்து வருத்தப்பட்ட நடிகர் பாண்டியராஜன்-வீடியோ

    சென்னை : நடிகரும் இயக்குநருமான ஆர்.பாண்டியராஜனின் இரண்டாவது மகன் பிருத்விராஜன் சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்ட 'தொட்ரா' படத்தின் ஹீரோ. இப்படத்தை பாக்யராஜின் சிஷ்யர் மதுராஜ் இயக்கியிருக்கிறார்.

    பள்ளியில் படிக்கும்போதே அப்பா பாண்டியராஜனின் இயக்கத்தில் 'கைவந்த கலை' படத்தில் அறிமுகமான பிருத்விராஜன், தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்காக போராடி வருகிறார்.

    " 'தொட்ரா' படம் காப்பி ரெடி ஆகிடுச்சு. நான் படத்தைப் பார்த்துட்டேன். ரொம்ப நல்லா வந்துருக்கு. சென்சார் ப்ராசஸ் போய்க்கிட்டு இருக்கு." என்பவரிடம் தொடர்ந்து பேசினோம். அவரது பேட்டி இங்கே...

    'தொட்ரா' படம் எப்படி?

    'தொட்ரா' படம் எப்படி?

    "தமிழ்நாட்டுல உண்மையா நடந்த ஒரு சம்பவத்தை மையமா வெச்சு உருவாகியிருக்கிற கதை. ரசிகர்களுக்குத் தேவையான சுவாரஸ்யமான விஷயங்கள் படத்தில் சேர்க்கப்பட்டிருக்கு. என்னோட கேரக்டர் பத்தி சொல்லணுமா, ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து காலேஜ் படிக்கிற பையன். காலையில் தினமும் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் போடுற பையன். இந்த வாழ்க்கையில அவன் சந்திக்கிற பொண்ணு யாரு, அந்தப் பொண்ணை சந்திக்கிறதால என்ன நடக்குது. கடைசில ரெண்டு பேரும் சேருறாங்களா இல்லையா.. இதுக்குள்ள நடக்கிற சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் படம்."

    ட்ரெய்லர் பார்த்தா சாதிச் சண்டை சார்ந்த படம் மாதிரி தெரியுதே?

    ட்ரெய்லர் பார்த்தா சாதிச் சண்டை சார்ந்த படம் மாதிரி தெரியுதே?

    "படத்தில் குறிப்பிட்டு எந்த சாதின்னு எங்கேயும் இருக்காது. சமூகத்தில் நடக்கிற விஷயங்களை கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்ல முயற்சி பண்ணியிருக்கோம். நிறைய லவ் ஸ்டோரியில ஹீரோவும், ஹீரோயினும் கடைசில சேர்றாங்களா இல்லையாங்கிறதை பார்த்திருக்கோம். இந்தப் படம் பார்த்தா தமிழ்நாட்டுல இப்போ என்ன நடந்துக்கிட்டு இருக்குங்கிறதை ரிலேட் பண்ணிக்க முடியும். மெசேஜ் சொல்றமாதிரி இருக்காது. மெசேஜ் சொன்னா கேட்கிற மூட்ல ரசிகர்கள் இல்லை. மெசேஜ் சொல்ற அளவுக்கு நம்ம பெரிய ஆளும் கிடையாது. நல்ல என்டர்டெயினிங் ஃபிலிமா இருக்கும்."

    உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலைன்னு பாண்டியராஜன் சார் ஆதங்கமா பேசியது பற்றி?

    உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலைன்னு பாண்டியராஜன் சார் ஆதங்கமா பேசியது பற்றி?

    "எந்த துறையா இருந்தாலும் இருக்கிற தொழில்ல முன்னுக்கு வரணும்ங்கிறது எல்லோருக்கும் வர்ற ஆசை. இந்தப் பயணம் நோக்கி போகும்போது இழப்புகள், வலி எல்லோருக்கும் இருக்கும். ஆனா, அதுக்காக ஏமாற்றம் அடையக்கூடாது. இது எல்லோருக்கும் நடக்கிற விஷயம் தான். எப்போதும் உழைப்புக்கு பலன் கிடைச்சே தீரும். ஒரு அப்பாவா அவர் பேசும்போது கொஞ்சம் எமோஷன் ஆனாரு. அவ்ளோதான்."

    மம்முட்டி படத்தில் நடித்தது பற்றி?

    மம்முட்டி படத்தில் நடித்தது பற்றி?

    "மம்முட்டி சார் ப்ரொடக்‌ஷன்ல 'ஸ்ட்ரீட் லைட்ஸ்'ங்கிற படத்துல நடிச்சிருக்கேன். அதுல எனக்கு சூப்பரான கேரக்டர். மலையாளத்துல அது ஏற்கெனவே ரிலீஸ் ஆகிடுச்சு. தமிழில் மட்டும் நான் நடிச்சிருக்கேன். சீக்கிரம் அந்தப் படம் தமிழில் ரிலீஸ் ஆகும்."

    ஹீரோவா நடிக்கும்போதே செகண்ட் ஹீரோ, வில்லன் ரோல்கள்ல நடிக்கிறீங்களே?

    ஹீரோவா நடிக்கும்போதே செகண்ட் ஹீரோ, வில்லன் ரோல்கள்ல நடிக்கிறீங்களே?

    " 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படத்தில் யார் ஹீரோன்னே சொல்லமுடியாது. மம்முட்டி சார் ஒரு கேரக்டரா இருப்பார். நான் ஒரு கேரக்டரா இருப்பேன். யார் ஹீரோங்கிற கேள்விக்கே அதில் இடம் இருக்காது. ஒரு கதை கேட்கும்போது என்னோட பார்ட் படத்தில் எப்படி இருக்குனு பார்ப்பேன். என்னோட கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கான்னுதான் பார்ப்பேன். இப்போ ஹீரோ ஹீரோயின்ற டேகே இல்லை. இப்போ வர்ற படங்கள்ல நடிக்கிறவங்க யாருக்கு ஸ்கோப் இருக்குனு பார்க்கிறாங்களே தவிர, இதுல யார் லீட், யார் செகண்ட் லீட்னுலாம் பார்க்கிறது இல்லை."

    இதை ஆரோக்கியமான விஷயமா பார்க்கிறீங்களா?

    இதை ஆரோக்கியமான விஷயமா பார்க்கிறீங்களா?

    "இன்னும் சில வருஷங்கள்ல ஹீரோ, ஹீரோயின்னு யாரும் கதை கேட்க மாட்டாங்க. கேரக்டர் எந்தமாதிரிங்கிறதுதான் முதல் கேள்வியா இருக்கும். இப்போ பெரும்பாலானோர் அந்த ஸ்டேஜுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. முன்னாடிலாம் ரெண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறதுக்கே கஷ்டமான சூழ்நிலையா இருக்கும். இப்போ வர்ற படங்கள்ல இதெல்லாம் நிறைய மாறிக்கிட்டு இருக்கு. இது ஒரு ஆரோக்கியமான விஷயம். என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல நடிகன்னு நாம பேர் வாங்கணும். நமக்கு முக்கியத்துவம் இருக்கணும். அவ்ளோதான்."

    அப்பா பாண்டியராஜன் டைரக்‌ஷன்ல திரும்ப நடிக்கிற ஐடியா இருக்கா?

    அப்பா பாண்டியராஜன் டைரக்‌ஷன்ல திரும்ப நடிக்கிற ஐடியா இருக்கா?

    "இப்போதைக்கு எந்த பிளானும் இல்லை பிரதர். எதிர்காலத்துல நடக்கலாம். அப்பா இயக்கிய 'கைவந்த கலை' தான் எனக்கு முதல் படம். சினிமா குடும்பத்தில் வளர்ந்தாலும் சினிமா தான் என் எதிர்காலமா இருக்கப்போகுதுனு அப்போ எனக்குத் தெரியலை. எனக்கு என்ன ஃபியூச்சர்னே தெரியாம நான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது அந்தப் படத்துல நடிச்சேன். இப்போ இந்த டிராவல்ல நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். என்ன பண்ணக்கூடாதுனு தெரிஞ்சிருக்கு."

    ஏன் அவ்ளோ விரைவான அறிமுகம்?

    ஏன் அவ்ளோ விரைவான அறிமுகம்?

    "நான் பத்தாவது படிக்கும்போது ஒரு படத்துல ஸ்கூல் பையனா நடிக்க ஆஃபர் வந்துச்சு. அந்தப் படம் எதிர்பாராவிதமா ட்ராப் ஆச்சு. முதல் படமே ட்ராப் ஆகிருச்சேனு உடனே அப்பா டைரக்‌ஷன்ல உருவான படம் தான் 'கைவந்த கலை'. அதுக்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் கத்துக்க ஆரம்பிச்சேன். அந்தப் படத்துல நடிக்கும்போது அந்த ஷாட் எப்படி வந்திருக்கு.. நம்மளை எப்படி பார்ப்பாங்க.. எதுக்காக நடக்குதுனு ஒண்ணுமே தெரியாம ஜீரோவா இருந்தேன்."

    அடுத்து பண்ணிட்ருக்க படங்கள்?

    அடுத்து பண்ணிட்ருக்க படங்கள்?

    " 'சகா'னு ஒரு படத்துல வில்லன் கேரக்டர் பண்ணியிருக்கேன். ஒரு நல்ல லைன் அப்ல ப்ராஜெக்ட்ஸ் இருக்கு. 'காதல் முன்னேற்ற கழகம்' படம் ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. இன்னொரு டைட்டில் வைக்காத படம் நடிச்சு முடிச்சிருக்கேன். வரிசையா சில நல்ல படங்கள் வர்றதன் மூலமா நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கிறேன்."

    சிம்பு 'தொட்ரா' படத்தில் பாடியிருப்பது பற்றி?

    சிம்பு 'தொட்ரா' படத்தில் பாடியிருப்பது பற்றி?

    " 'பக்கு பக்கு'னு ஒரு பாட்டு சிம்பு பாடியிருக்கார். இசை வெளியீட்டுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணின அந்தப் பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அது ரொம்ப சந்தோஷமான தருணம். சிம்பு வந்து அவ்வளவு சீக்கிரம் பாடித் தருவார்னு யாரும் எதிர்பார்க்கவே இல்லை. 'அவர்கிட்டலாம் போகாதீங்க.. பாடிக் கொடுக்கமாட்டார்'னு நிறைய பேர் டிஸ்கரேஜ் பண்ணாங்க. நான் ஜஸ்ட் ட்ரை பண்ணிப் பார்க்கலாமேனு மெசேஜ் பண்ணேன். உடனே, ரிப்ளை பண்ணி, டிராக் அனுப்புங்க எனக்கு பிடிச்சிருந்தா பாடுறேன்னு சொன்னாரு. அடுத்த நாளே ரெக்கார்டிங் வச்சுக்கலாம்னு சொல்லி முடிச்சுக் கொடுத்துட்டார்."

    ஹீரோயின் வீணா நந்தகுமார்?

    ஹீரோயின் வீணா நந்தகுமார்?

    "வீணா நந்தகுமார் இந்தப் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. நாங்க ஹீரோயினா நடிக்க நிறைய பேரை பார்த்தும் யாருமே செட் ஆகலை. ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டு நாலு நாள் வரையும் கூட ஹீரோயின் யார்னே தெரியலை. 'ஸ்ட்ரீட் லைட்ஸ்' படம் பண்ணிட்ருக்கும்போது அந்தப் படத்தோட அசோசியேட் இந்தப் பொண்ணை ட்ரை பண்ணிப் பாருங்கனு சொல்லியிருந்தாங்க. வீணா போட்டோவை உடனே டைரக்டருக்கு அனுப்பினேன். அவங்களை வரசொல்லி, டெஸ்ட் ஷூட் பண்ணி உடனே ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. மொழி தெரியாத ஆர்டிஸ்ட் என்றாலும் சீக்கிரம் அடாப்ட் ஆகி, நல்லா பண்ணியிருக்காங்க."

    சினிமாவில் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம்?

    சினிமாவில் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரெல்லாம்?

    "சிசிஎல் கிரிக்கெட் மூலமா நிறைய பேர் கூட நெருக்கம் ஏற்பட்டுச்சு. எல்லோரும் ஒண்ணா டிராவல் பண்ணுவோம். ஒண்ணா கிரிக்கெட் ஆடுவோம். அது மூலமா நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. எனக்கு பரத் ரொம்ப க்ளோஸ். ஆர்யா பிரதர், 'இனிது இனிது' ஷரண், இப்படி நிறைய பேர் க்ளோஸ். சாந்தனு எனக்கு சின்னவயசுலேர்ந்து ஃப்ரெண்ட். ஷாம் என்னோட வெல் விஷர். விஷால் அண்ணா நான் நல்லா வரணும்னு ஆசைப்படுறவங்கள்ல ஒருத்தர்."

    விஷாலின் நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீங்க?

    விஷாலின் நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீங்க?

    "எல்லாமே நல்ல விஷயங்கள் நடக்கப்போறதுக்கான அறிகுறி. இப்போ உடனடியா நடக்கலைன்னாலும், கொஞ்சம் டைமுக்கு அப்புறம் எல்லோருக்கும் சாதகமானதா இருக்கும். நிறைய படங்கள் இருக்கு.. கவனிக்கிற விஷயங்கள் இருக்கு.. இதையெல்லாம் விட்டுட்டு நமக்காக நல்ல விஷயங்கள் பண்றார்னா சும்மா கிடையாது. நல்ல மாற்றங்கள் நிச்சயம் நடக்கும்."

    English summary
    Actor Director R.Pandiarajan's 2nd son Prithvirajan is the hero of 'Thodraa' movie. Here is an exclusive interview with Prithvirajan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X