'காத்திருப்போர் பட்டியல்' நிச்சயம் வெல்லும்.. ஹீரோ சச்சின் மணி நம்பிக்கை.. ஒன்இந்தியா வீடியோ

'காத்திருப்போர் பட்டியல்' படம் நிச்சயம் வெற்றி பெறும் என படத்தின் ஹீரோ சச்சின் மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Recommended Video

காத்திருப்போர் பட்டியல் ஹீரோ ஹீரோயின் பேட்டி, விமர்சனம்

சென்னை : 'காத்திருப்போர் பட்டியல்' திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என அப்படத்தின் ஹீரோ சச்சின் மணி, ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லேடி டிரீம் சினிமாஸ் சார்பில் பைஜாடாம் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'காத்திருப்போர் பட்டியல்'. பாலையா டி.ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகை அட்டக்கத்தி நந்திதா ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் புதுமுக நாயகன் சச்சின் மணி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

Actor Sachin mani interview

'காத்திருப்போர் பட்டியல்' படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் சத்யா. தனது முதல் பட அனுபவம் பற்றியும், சத்யா கதாபாத்திரத்தில் நடித்தது பற்றியும் ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், 'காத்திருப்போர் பட்டியல்' படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, " 'காத்திருப்போர் பட்டியல்' மூலம் அறிமுகமாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வித்தியாசமான மற்றும் புது பேக்டிராப்பில் படம் உருவாகியுள்ளது. காதல் காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள காத்திருப்போர் பட்டியலில் என்னுடன் சீனியர் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நந்திதா, அருள்தாஸ், சென்ராயன் என பலர் நடித்துள்ளனர்.

படம் முழுவதும் காமெடி இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். நன்றி என்றார் சச்சின் மணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X