Sarathkumar: பிரதீப் காலடியில் அழுதேன்.. தேவயானி இப்படி கேட்கலாமா? சரத்குமார் பேட்டி!

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோஹினி என பல நடித்திருந்தனர். தியேட்டரில் வெளியாகி நல்ல வம்சவத்தை பெற்ற இந்த திரைப்படத்தில் சரத்குமார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்தது. தற்போது சரத்குமார், விஜயகாந்தின் மகன் சண்​முக பாண்​டியன் ஹீரோ​வாக நடிக்​கும் கொம்புசீவி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட சரத்குமார், பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், டியூட் திரைப்படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். அனால், தேவயானி எனக்கு போன் செய்து, டியூட் படம் பார்த்தேன். மிகவும் அருமையாக நடித்திருந்தீர்கள். ஆனால், ஒரே விஷயம் எனக்கு புரியவே இல்லை.
ஒரு காட்சியில் நீங்க பிரதீப்பின் காலடியில் உங்காந்து அழுகிறீர்கள். அந்த காட்சிக்கு எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என்று கேட்டார். உடனே நான், பிரதீப் ரங்கநாதனின் காலடியில் உட்கார்ந்து அழவில்லை. படத்தில் அவர் என்னுடைய தங்கச்சி மகன், அவனுடைய காலடியில் அமர்ந்து அழுதேன். அது ஒரு கதாபாத்திரம்.

Sarathkumar Dude Pradeep Ranganathan

என்ன தப்பு: பிரதீப் ரங்கநாதன் இப்பொழுது தான் சினிமாவில் நடிக்க வந்தார். அவர் காலடியில் நான் அழுவதா? அதுபோன்ற ஒரு காட்சியில் நான் அடிக்க மாட்டேன் என்று சொல்வது தவறு, ஒரு பெரிய செல்வாக்கு உள்ள மனிதன் தவறு செய்து அதை உணர்கிறான், அப்படி உறவுகளிடம் முகத்தை காட்டப்போகிறோம் என கூனிக்குறுகி இருக்கும் ஒரு காட்சியில் பிரதீப்பின் காலடியில் அமர்ந்து அழுவதில் என்ன தப்பு என்று தெரியவில்லை என்றார்.

கொம்புசீவி: விஜயகாந்தின் மகன் சண்​முக பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள இப்படத்தை பொன்​ராம் இயக்கி உள்ளார். இதில் சரத்​கு​மார் முக்​கிய கேரக்டரிலும் புது​முகம் தார்​னிகா நாயகி​யாக​வும் நடிக்​கின்றனர். சுஜித் ஷங்​கர், கல்​கி, முனீஷ்​காந்த், காளி வெங்​கட், ஜார்ஜ் மரி​யான் உள்​ளிட்​டோர் நடிக்​கும் இந்​தப் படத்​துக்கு பால சுப்​ரமணி​யெம் ஒளிப்பதிவு செய்​கிறார். யுவன் சங்​கர் ராஜா இசையமைக்​கிறார். ஸ்டார் சினி​மாஸ் முகேஷ் டி.செல்​லையா தயாரிக்​கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X