படத்துல எல்லாரையும் மிரட்டிக்கிட்டே இருப்பேன்... சரவணன் சிறப்பு பேட்டி

சென்னை : நடிகர் சரவணன் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

இந்த படம் புது அனுபவம் | Naan Kadavul Illai | Actor Saravanan Exclusive | Filmibeat Tamil

அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் தற்போது நான் கடவுள் இல்லை படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் அனைவரையும் மிரட்டிக் கொண்டே இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் சரவணன்

நடிகர் சரவணன்

நடிகர் சரவணன் நந்தா, அரண்மனை உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார். பருத்தி வீரன் படம் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. சரவணன் என்றால் பருத்தி வீரன் என்ற பெயரை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் ரோல்களிலும் வில்லனாகவும் மிரட்டி வருகிறார் சரவணன்.

நான் கடவுள் இல்லை படம்

நான் கடவுள் இல்லை படம்

தற்போது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் சரவணன். சமுத்திரக்கனி லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் வில்லனுக்கும் சமமான கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான திரைக்கதையுடன் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கம்

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கம்

சிறப்பான பல படங்களை இயக்கியுள்ள எஸ்ஏசி நீண்ட காலங்களுக்கு பின்பு தற்போது இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இடையில் நடிப்பிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன் மகிழ்ச்சி

சரவணன் மகிழ்ச்சி

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறித்து ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சரவணன், படம் புது அனுபவத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். படத்தில் ஹீரோவிற்கும் தனக்குமான காட்சிகள் குறைவாக இருந்தபோதிலும் ஹீரோ, ஹீரோயின்கள் அனைவரையும் தான் மிரட்டிக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.

வித்தியாசமான நடிப்பு

வித்தியாசமான நடிப்பு

ஹீரோவிற்கும் டெவிலுக்கும் இடையிலான போராட்டம்தான் கதை என்றும் தான் டெவிலாக நடித்துள்ளதாகவும் சரவணன் கூறியுள்ளார். எஸ்ஏசி கதை சொன்னவுடன் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் தான் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்

ஆரம்பத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ள சரவணன், வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாகவும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்போது தன்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதே தனது கவனமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X