ரஜினி பத்தி யாராவது தப்பா சொன்னா அடிச்சிடுவேன்.. பொங்கிய சித்தப்பு சரவணன்.. அதுதான் விஷயமா?

சென்னை: பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு 70 வயது ஆள் கூட தன்னை சித்தப்பு என்றே கூப்பிடுவதாகவும், பெண்கள், தாய்மார்கள் எல்லாம் அன்போடு சிரித்துக் கொண்டே சித்தப்பு என்று சொல்வதை கேட்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது என நடிகர் சரவணன் பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த அனுபவத்தையும் சமீபத்தில் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சரவணன் கடைசியாக சுழல் 2 வெப்சீரிஸில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அந்த வழக்கை விசாரிக்கும் கதிருக்கு உறுதுணையாக இருப்பது போல நடித்து நாடகமாடி கடைசியாக தனது சுயரூபத்தை காட்டும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருந்தார்.

Actor Saravanan says he will thrashed anyone if they speak wrong about Rajinikanth
Photo Credit:

அடுத்ததாக அவர் லீடு ரோலில் நடித்துள்ள சட்டமும் நீதியும் என்ற வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அதுதொடர்பான புரமோஷனில் படுபிசியாக களமிறங்கியுள்ள சரவணன் சூப்பர் ஸ்டார் பற்றியும் டி. ராஜேந்தர் பற்றியும் பல்வேறு தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

பருத்திவீரன் சித்தப்பு: நடிகர் சரவணனுக்கு இப்போ 58 வயதாகிறது. 1991ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, மாமியார் வீடு, சூரியன் சந்திரன், செவத்தப்பொண்ணு, தாய் மனசு, நந்தா, தாயுமானவன் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், பலருக்கும் அவர், அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்த சித்தப்பு கதாபாத்திரம் மூலமாகத்தான் மிகப்பெரியளவில் பிரபலமானார் என்பது தெரியும். அதன் பின்னர், தொடர்ந்து படங்களில் நெகட்டிவ் ரோல் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Actor Saravanan says he will thrashed anyone if they speak wrong about Rajinikanth
Photo Credit:

லேடி சூப்பர் ஸ்டார் முதல் சூப்பர் ஸ்டார் வரை: நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்த சரவணனுக்கு அதே நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து டைனோசர் என்றெல்லாம் கலாய்க்கும் வசனங்களை நெல்சன் கொடுத்த போது, ரொம்பவே தயங்கினேன். ஆனால், ரஜினி சார் தான் அதெல்லாம் பரவால பண்ணுங்கன்னு தைரியம் கொடுத்தார்.

ரஜினி பத்தி தப்பா பேசுனா அடிச்சுடுவேன்: சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ஃபேன் தான். யாராவது ஏதாவது ரஜினி பத்தி தப்பா பேசுனா அடிச்சுடுவேன். அந்த அளவு அவர் மீது தீவிர ரசிகனா இருந்த என்னையையே அவருக்கு வில்லனாக நடிக்க வச்சுட்டாரு நெல்சன். அந்த படத்துல நடிச்ச சீன் முழுக்கவே நெல்சனோட ஐடியா தான். எல்லா கிரெடிட்ஸும் அவருக்குத்தான் போய் சேரணும் என்று ரஜினி ரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

டி. ராஜேந்தர் எல்லாம் வேற ரகம்: ஆரம்பத்தில் டி. ராஜேந்தர் படங்களில் நடித்திருக்கிறேன். அவரை சுற்றி 10 பேர் இருந்தால், 10 பேருக்கும் வசனம் சொல்லித் தருவார். எந்த பேப்பரும், பேனாவும் இருக்காது. அவ்ளோ பெரிய வசனத்தை கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி நடிக்கப் போலாம்னு இருக்கும் போது, சட்டென அது வேணாம்ப்பா, இந்த வசனம் பேசு என ஆன் தி ஸ்பாட்டில் அப்படியே அப்டேட் பண்ணுவார். அவரெல்லாம் வேற ரகம் என பேசியுள்ளார். பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட பின்னர் ஏகப்பட்ட படங்களில் சரவணன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X