திருமணமாகி 10 வருஷமாச்சு.. இன்னும் குழந்தை இல்ல.. காரணத்தை சொன்ன சாந்தனு!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாக்யராஜ், இவர் பல வெற்றிப்படத்தை இயக்கி தனக்கு என்று தனி அடையாளத்தையே வைத்து இருக்கிறார். இவரின் மகன் சாந்தனு பாக்யராஜ், அப்பா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவராக இருந்தாலும், தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள போராடி வருகிறார். இவர் தனது மனைவி கிகியுடன் இணைந்து சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில், தற்போது பல விஷயத்தை பேசி உள்ளார்.

நடிகர் சாந்தனு பாக்யரஜ், குழந்தை நட்சத்திரமாக வேட்டிய மடிச்சிகட்டு என்ற படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சக்கரக்கட்டி படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஆனால், அந்த படம் வெற்றி படமாக அமையவில்லை. அதன் பின்னர் சித்து + 2 படம் ஓரளவிற்கு சாந்தனுவை திரையுலகிற்கு காட்டியது. அந்த படத்தை தொடர்ந்து, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், மாஸ்டர், முருங்கைக்காய் சிப்ஸ், ராவண கோட்டம் மற்றும் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தார். இதில் ப்ளூ ஸ்டார் படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

Shanthanu Bhagyaraj kiki

காதல் திருமணம்: சாந்தனு பாக்யராஜ் பிரபல தொகுப்பாளி கீர்த்தியை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கீர்த்தி மற்றும் சாந்தனு இருவரும் ஜோடியாக யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். மேலும் இன்ஸ்டாவிலும் வீடியோ மற்றும் ரீல்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். தனது யூடியூப் சேனலில் இருவரும் பேசி உள்ளனர். அதில், எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது, இதுவரைக்கும் குழந்தை இல்லை. எங்கள் இருவரையும் பார்க்கும் பலர் குழந்தை எப்போனு கேட்குறாங்க, இன்னும் சில, இப்படியே இரண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்துலானு நினைக்கிறீங்களா என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். இதனால், எந்த கல்யாணத்திற்கும், எந்த விசேஷத்திற்கு போகவே முடியல.

எங்க விருப்பம்: இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு இப்போது நான் பதில் சொல்கிறேன். நாங்க எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ய வேண்டும். என் மனைவி கீர்த்தி, கர்ப்பமானதும் சொல்கிறேன். நீங்களே அந்த குழந்தையை நல்லபடியாக வளர்ந்துக் கொள்ளுங்கள் என சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதை நான் கோவத்தில் சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம், சிலர் எங்கள் மீது இருக்கும் அக்கறையால் கூட இந்த கேள்வியை கேட்கலாம். ஆனால், என் மனைவி கர்ப்பமாகவதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் எங்களின் தனிப்பட்ட விஷயம். கடவுளுக்கு எந்த நேரத்தில் எங்களுக்கு குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் என்று நன்றாக தெரியும் அந்த நேரத்தில் நிச்சயம் எல்லாம் நன்றாக நடக்கும் என சாந்தனு பதில் அளித்துள்ளார்.

சின்னதிரையில் மானாட மயிலாட மற்றும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி லிஸ்டில் இடம் பிடித்தவர் கீர்த்தி. இவர் நடனக் கலைஞரும்கூட. தனக்கென்று தனிப்பட்ட வகையில் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். மேலும், திரைப்பட இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X