மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் தளபதி எங்க ஸ்டெப் போட்டார்.. சாந்தனு பேட்டி !

சென்னை : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி நாங்கள் போட்ட ஸ்டெப்பை மேடையில் ஆடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று சாந்தனு கூறியுள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay & Surya Live Chat | A.R.Murugadoss, Shah Rukh Khan | Imaginary

சினிமாவில் கதைகள், பாடல்கள், வசனங்கள் என பல அம்சங்கள் இருந்தாலும் அதை ரசிக்கும் மக்கள் இருந்தால்தான் சினிமாவிற்கு உண்டான மரியாதை கிட்டும், சினிமாவின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ரசிக்கும் விதம் மாறியிருந்தாலும் இன்றும் மக்களிடையே ரசனை மட்டும் குறையவே இல்லை. நாம் ரசிக்கும் பிரபலங்களுக்கு கூட ஒரு பிடித்தமான ஹீரோக்கள் இருபார்கள். அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் ரஜினி படத்தின் வசனத்தை தன் அப்பாவிடம் பேசித்தான் நடிக்க அனுமதி வாங்கினார் என்பது பலருக்கும் தெரியும்.

Actor Shanthanu Interview

அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசனை ரஜினியின் மேல் விஜய்க்கு உண்டு. தற்போது அதை தொடர்ந்து பல பிரபலங்கள் விஜயை ரசித்து வளர்ந்தவர்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுள் ஒருவர்தான் சாந்தனு. சாந்தனு பிரபல நடிகர், இயக்குனரான பாக்யராஜ் அவர்களின் மகனாக இருந்தாலும் அவர் மிகப்பெரிய விஜய் ரசிகர் ஆவார். இதை பல நேர்காணலில் சாந்தனு சொல்லியிருக்கிறார், ரசிகன் என்பதையும் தாண்டி தன் தம்பியாக தான் விஜயும் இவரை நேசிக்கிறார். சாந்தனுவின் திருமணத்தில் அவருக்கு தாலி எடுத்து கொடுக்கும் அளவிற்கு நெருக்கமானவர் தளபதி விஜய்.

சாந்தனு தமிழ் சினிமாவில் சர்க்கரைக்கட்டி,சிந்து ப்ளஸ்2 போன்ற பல திரைப்படங்கள் நடித்தாலும் அவர் பெரிதும் பேசப்படவில்லை. தற்போது இவர் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார், இந்த படத்திற்கு பின் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Shanthanu Interview

சாந்தனுவின் மனைவியான கீர்த்தி மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்ததன் மூலம் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் டான்ஸ் மீது மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர் கீர்த்தி. இதையடுத்து கிகி டான்ஸ் ஸ்டூடியோ என்ற பெயரில் டான்ஸ் வகுப்பும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் தளபதி விஜய் அவர்கள் எங்களுடைய ஸ்டெப்பை தான் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ஆடினார் என்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

Actor Shanthanu Interview

நாங்கள் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச்சிற்கு முன்பு வாத்தி கமிங் பாட்டிற்கு டான்ஸ் ஆடலாம் என்று எங்கள் ஸ்டுடியோவில் முடிவு செய்தோம். இதை நான் சாந்தனுவிடம் சொன்னவுடன் நானும் ஆடுவேன் என்று சொன்னார். பின் நாங்கள் கொரியோகிராப் செய்து டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டோம். அதன் பின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி எங்கள் ஸ்டெப்பை ஆடியவுடன் அனைவரும் செம ஹாப்பி ஆனோம்! என்று கூறினார்.

இந்த ஸ்டெப்பை விஜய் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் ஆடியதை தொடர்ந்து, பல ரசிகர்கள் பிரபலங்கள் என இந்த ஸ்டெப்பை போட்டு வீடியோவை வெளியிட்டது மிக வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X