விஜயின் மாஸ்டர் பட ட்ரெயிலர் குறித்து மனம் திறந்த நடிகர் ஷாந்தனு பாக்யராஜ்!

சென்னை: நடிகர் அர்ஜூன் தாஸை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் குறித்து நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்திருக்கின்றனர்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, ஷாந்தனு பாக்யராஜ், விஜே ரம்யா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தள்ளிப்போகும் ரிலீஸ்

தள்ளிப்போகும் ரிலீஸ்

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தடைப்பட்டது. தொடர்ந்து திரையரங்குகளும் மூடப்பட்டிருப்பதால் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் வருகிறது,

ட்ரெயிலர் மாஸ்

ட்ரெயிலர் மாஸ்

மாஸ்டர் படத்தின் ட்ரெயிலரை எப்போது வெளியிடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு நச்சரித்து வருகின்றனர். படத்தில் நடித்த பிரபலங்கள் ஒவ்வொருவரும் ட்ரெயிலரை தாங்கள் பார்த்து விட்டதாக கூறி வருகின்றனர். மாஸ்டர் ட்ரெயிலரை பார்த்த நடிகர் அர்ஜூன் தாஸ் ட்ரெயிலர் மாஸாக இருப்பதாக கூறினார்.

ஷாந்தனு தகவல்

ஷாந்தனு தகவல்

மேலும் ட்ரெயிலரில் இடம் பெற்றுள்ள ஒரு டயலாக் பெரிதும் பேசப்படும் என்றார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மற்றொரு முக்கிய நடிகரான ஷாந்தனு பாக்யராஜ் அதன் ட்ரெயிலர் குறித்து பேசியுள்ளார். அதாவது தான் மாஸ்டர் படத்தின் டிரெய்லரைப் பார்க்காமல் தவறவிட்டதை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் அழைத்தார்

இயக்குநர் அழைத்தார்

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த வீடியோ நேர்காணலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மே மாதத்தில் அரசு போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்த போது தன்னை ஸ்டுடியோவுக்கு வருமாறு கேட்டுக் கொண்டதாக ஷாந்தனு கூறியுள்ளார்.

தனக்கே தன்மீது கோபம்

தனக்கே தன்மீது கோபம்

ஆனால் அப்போது ஷார்ட் பிலிம் வேலையில் கவனம் செலுத்தியதால் அப்போது ட்ரெயிலரை பார்க்க முடியாமல் போயிவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் அர்ஜுன் தாஸ் மற்றும் படக்குழுவை சேர்ந்த சிலர் ட்ரெயிலரை பார்த்ததை அறிந்து தனக்கே தன்மீது கோபம் வந்துள்ளதாக கூறியுள்ளார் ஷாந்தனு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X