விஜய் இப்படிப்பட்டவரா? மக்கள் நெஞ்சில் குடியிருக்க காரணமே இதுதான்.. நடிகர் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கொடி அறிமுகம், முதல் மாநாடு என விஜய் அரசியலில் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பயணம் செய்தால், மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதை தெரிந்த கொண்ட விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். விஜய்யின் கோட் படம் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. தற்போது விஜய்யின் கடைசி படத்தை எச் வினோத் இயக்க உள்ளார். அதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்காக பூஜை போடப்பட்டு படத்தின் படப்பிடிப்பை படக்குழு தொடங்கி உள்ளது.

நடிகர் ஸ்ரீகுமார்: இப்படி விஜய் குறித்தும், அவரின் அரசியல் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், சீரியல் மற்றும் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்ரீகுமார், விஜய் பற்றி பல விஷயத்தை ஷேர் செய்துள்ளார். அதில், ஏ.எல். விஜய் இயக்கிய தலைவா படத்தில், நானும் அவருடன் இணைந்து நடித்து இருந்தேன். அப்போது இண்டர்வெல் காட்சி டிரேட் சென்டரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அன்றைக்கு கடுமையான வெயில், வெளியில் தலைகாட்டவே முடியாத அளவிற்கு செம வெயில். எப்போ பிரேக் கிடைக்கும் கேரவனுக்கு போகலாம் என்று அனைவரும் இருக்கிறோம்.
கடுமையான வெயிலில் விஜய்: ஆனால், பிரேக் வந்ததும், அந்த கடுமையான வெயிலில் தளபதி குடை பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். மற்றவர்கள் அவருக்குக் குடை பிடிப்பதை அவர் அனுமதிக்க மாட்டார். இதனால் நீண்ட நேரமாக குடைபிடித்துக்கொண்டு நின்று இருந்தார். அவர் கேரவனுக்கு போனால்தான நாங்கள் போக முடியும். நான், காளி வெங்கட் அண்ணா 3 பேருக்கும் ஒரே கேரவன். ஆனால், அவர் வெயிலில் நின்று இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல், அவர் எப்போது போவார் என்று பார்த்துக்காண்டு இருந்தோம். ஆனால், அவர், கையில் குடையை வைத்துக்கொண்டு, அங்கேயே ஒரு சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார். அவர் வெயிலில் இருந்து எழுந்து போகவேயில்லை.
அவரின் குணம்: இதைப்பார்த்து நான் அப்படியே திகைத்துப்போனேன், சீரியல் நடிகராக இருந்தால், 40 முறை கேரவனுக்கு சென்றிருப்பார்கள். ஆனால் விஜய் அப்படி செய்யவேவில்லை. அதேபோல் சாப்பிடும் போதும், மற்றவர்கள் உணவு பறிமாறுவதை அவர் விரும்ப மாட்டார். உணவு வந்ததும், அந்த கேரியரை எடுத்து அவரே உணவை தன் தட்டில் போட்டுக்கொள்வார். அவரின் இந்த குணம் தான், கோடான கோடி மக்களின் நெஞ்சில் அவரை குடியிருக்க வைத்து உள்ளது என்று நடிகர் ஸ்ரீகுமார் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











