விரைவில் திருமணம்… மணப்பெண் யார்? அது சஸ்பென்ஸ்: சித்தார்த்

By Mayura Akilan

சென்னை: ''இந்த ஆண்டு இறுதிக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் மணப்பெண் யார் என்பது சஸ்பென்ஸ் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

பாய்ஸ், ஆயுத எழுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்துள்ள சித்தார்த்துக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சித்தார்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், ''கடந்த முறை தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றியை தொடர்ந்து உங்களை சந்தித்தேன். இந்த முறை ஜிகர்தண்டாவின் வெற்றிக்காக சந்திக்கிறேன்.

இது இயக்குநரின் படம், மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் இயக்குநர்தான். ரங்கே தே பாசந்தி திரைப்படம் போல ஜிகர்தண்டாவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அமீர்கான் கொடுத்த வாய்ப்புதான் ஜிகர்தண்டாவை என்னை ஒத்துக்கொள்ள வைத்தது.

அடுத்த சந்திப்பும் இதுபோல் ஒரு சந்தோஷமான சந்திப்பாக இருக்கும்'' என்றார். தொடர்ந்து திருமணம், ரசிகர்மன்றம், ஜிகர்தண்டா படம் பற்றி சித்தார்த் அளித்த பேட்டியை மேற்கொண்டு படியுங்கள்.

சிம்ஹாவின் வெற்றி

சிம்ஹாவின் வெற்றி

ஜிகர்தாண்டாவில் அனைவருமே சிரமப்பட்டு நடித்தனர். குறிப்பாக சிம்ஹாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

2014 சிறப்பான வருடம்

2014 சிறப்பான வருடம்

தீயா வேலை செய்யணும் குமாரு படம் கடந்த ஆண்டு வெற்றி பெற்றது. அதே போல இந்த ஆண்டு ஜிகர்தண்டா வெற்றி பெற்றுள்ளது. இனிவரும் படங்களும் இதே போல அமையும்.

காவியத்தலைவன்

காவியத்தலைவன்

ஜிகர்தண்டா போல காவியத்தலைவன் திரைப்படமும் எனக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. இரட்டை வேடத்தில் நடித்துள்ள மற்றொரு திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. 2014 மிகச்சிறப்பான வருடமாக எனக்கு அமைந்துள்ளது. இதேபோல மகிழ்ச்சியான நேரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்றார் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

திருமணம்

திருமணம்

கேள்வி: அடுத்த சந்தோஷமான சந்திப்பு உங்கள் திருமணம் தொடர்பாக இருக்குமா?

பதில்: அப்படி உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இந்த வருட இறுதிக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கேள்வி: அது, காதல் திருமணமாக இருக்குமா?

பதில்: திருமணமாக இருக்கும். காதல் திருமணமாக இருக்குமா? என்று சொல்ல முடியாது.

அது சஸ்பென்ஸ்

அது சஸ்பென்ஸ்

கேள்வி: மணப்பெண் யார்?

பதில்: மணப்பெண் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன்.

பொருத்தமான ஜோடி

பொருத்தமான ஜோடி

கேள்வி: உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?

பதில்: ஜோடியை நான் முடிவு செய்வதில்லை. இயக்குநர்தான் தான் முடிவு செய்கிறார். எனக்கு பொருத்தமானவர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

லட்சுமிமேனன்

லட்சுமிமேனன்

கேள்வி: ''சித்தார்த்தின் ரசிகை நான்'' என்று உங்களை லட்சுமிமேனன் புகழ்ந்து இருக்கிறாரே?

பதில்: லட்சுமிமேனன் என் ரசிகை என்று புகழவும் செய்வார். 'பாய்ஸ்' படம் வெளியானபோது, நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று என் காலை வாரவும் செய்வார்.

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

கேள்வி: நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அவசியமா, அவசியமில்லையா?

பதில்: எனக்கு ரசிகர் மன்றம் இல்லை. இஷ்டப்பட்ட நடிகர்கள் வைத்துக் கொள்கிறார்கள். எனக்கும், ரசிகர் மன்றத்துக்கும் சம்பந்தம் கிடையாது.

கொரிய படத்தின் காப்பி

கொரிய படத்தின் காப்பி

கேள்வி: ஜிகர்தண்டா, ஒரு கொரிய படத்தின் 'காப்பி' என்கிறார்களே?

பதில்: அதை நீங்கள் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்.

மிரட்டி நடிக்க வைத்தால்

மிரட்டி நடிக்க வைத்தால்

கேள்வி: அந்த படத்தில், நடிகரான விஜய் சேதுபதியை நீங்கள் மிரட்டி நடிக்க வைப்பது போல் ஒரு காட்சி வருகிறதே...அதுபோல் உங்களை யாராவது மிரட்டி நடிக்க வைத்து இருக்கிறார்களா?

பதில்: என்னை யாரும் மிரட்டவில்லை. அது, சினிமாவுக்காக வைக்கப்பட்ட காட்சி. அதை 'சீரியஸாக' எடுத்துக் கொள்ளக் கூடாது.''இவ்வாறு சித்தார்த் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X