டிக்டாக் ஆப்.. கடைசியில் எனக்கே ஆப்பு வச்சிருச்சு.. சிங்கம்புலி வருத்தம்!
சென்னை : டிக்டாக் பார்த்து எனக்கு நானே சூனியம் வச்சுகிட்டேன் என்று ஒரு பேட்டியின் போது சிங்கம்புலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மற்றும் நடிகரான சிங்கம் புலி படங்கள் இயக்குவதை நிறுத்தி சில வருடங்களாக நடித்து வருகிறார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே நடித்து வருகிறார். தற்போது சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரத்தில் மிஸ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் நடித்து இருக்கிறார்.

தற்போது சைக்கோ படத்திற்கான விளம்பரங்களின் போது கொடுக்கபட்ட நேர்காணல்களில் சிங்கம்புலி பல்வேறு சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் இயக்குனர் மிஸ்கின் சிறந்த மனிதன் உடன் வேலை செய்பவர்களை மனம் திறந்து பாராட்டுவதில் என்றும் பாரபட்சம் பார்க்காதவர். ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரையும் அழைத்து எப்படி நடித்து இருக்கிறார்கள் எப்படி பணியாற்றியிருக்கிறார்கள் என்று நடிகர்கள் முதல் டெக்னீசன் வரை பாராட்டுவார் என்ற தகவலையும் பகிர்ந்து இருக்கிறார் .

சைக்கோ படத்தில் தனது பங்கை பற்றி கூறிய சிங்கம்புலி. மிஸ்கின் தனது ஒரு படத்தை மட்டும் பார்த்து விட்டு தான் என்ன நடிக்க அழைதார் என்று கூறினார். மேலும் மிஸ்கின் கூறும்போது இந்த படத்தில் உங்களுக்கு வசனங்கள் மிக குறைவு என கூறினார். நானும் அவரின் படங்களை பார்த்து அவரைப்பற்றி சில புரிதலில் இருந்தேன். அதனாலே சைக்கோ படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று கூறினார் .
மேலும் தற்போது டிக்டாக் பற்றி பேசிய சிங்கம்புலி எனக்கு அந்த ஆப் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷத்தை தந்தது. நான் அதிக நேரம் அதில் செலவழித்தேன். என்னை போலவே ஒருவர் டிக்டாக் செய்வதை கண்டு வியந்து நேரில் அழைத்து பாராட்டினேன். ஆனால் கடைசியில் அந்த பையனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது. அப்புறம் அந்த பையன் என்னை போலவே சினிமாவில் நடித்து வருகிறான். 'என்னடா இது நமக்கு நாமே சூனியம்' வைத்தது போல் ஆகிவிட்டது என்று கூறினார்.

மேலும் இளையராஜா மிஸ்கின் உறவை பற்றி பேசிய சிங்கம்புலி. மிஸ்கின் இளையராஜா அமைக்கும் மெட்டை எதிர்த்து பேசமாட்டார் இளையராஜா கொடுத்தால் அது சரி என்று ஏற்றுக்கொள்வார் என்று கூறினார். அப்படி தான் இன்று உன்ன நினைச்சு பாடல் வெளியாகி பிரபலமடைந்து இருக்கிறது என்றார் .

கடைசியாக சிங்கம்புலி கூறுகையில் சினிமாக்குள் சாதி மதம் என எதுவும் இருக்க கூடாது. அனைவரும் ஒன்னு தான் என்று கூறினார். சைக்கோ படம் வரும் 24 ஜனவரி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதி. அதிதி, நித்யா மேனன் , சிங்கம்புலி, இயக்குனர் ராம், சாஜி சென் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். படத்தை இயக்கி இருக்கிறார் மிஸ்கின்.


Click it and Unblock the Notifications











