எஸ்.ஜே.சூர்யாவுக்கு மேரேஜ் எப்போ?.. அவரே சொல்லிட்டாரு.. அடேங்கப்பா மிரட்டி விட்டாரு போங்க
சென்னை: வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் எஸ்.ஜே.சூர்யா. இதைத்தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக இருந்தார். இயக்கத்திற்கு பிரேக் கொடுத்து தற்போது நடிகராக வலம் வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில், தனது வாழ்வில் நடந்த அனுபவங்களை எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்திருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள்.
இறைவி படத்தின் மூலம் நடிப்பு அரக்கன் என பெயர் பெற்ற எஸ்.ஜே.சூர்யா நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறைவி படத்திற்கு பிறகு மாநாடு, ஸ்பைடர், பிகில், கேம் சேஞ்சர் படங்கள் வரை வில்லனாக மிரட்டியவர் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கதையின் செகன்ட் ஹீரோகாவும் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு அவரது மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. மகேஷ் பாபு, விஜய், விக்ரம், ராம் சரண், நானி, சூர்யா என அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார்.

ஜெயிலர் 2 படத்தில் வில்லன்: ரஜினிகாந்த்- நெல்சன் கூட்டணியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக முன்னேறி வருகிறது. கோவையை தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு தீவிரமாக நடக்கிறது. இப்படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராயன் படத்தில் இருக்கும் கெட்டப்புகளை போன்றே ஜெயிலர் 2 படத்திலும் வித்தியாசம் காட்ட இருக்கிறாராம். ரஜினிக்கு எதிராக நடிப்பது சவாலான ஒன்று தான். எஸ்.ஜே.சூர்யாவிற்கு நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும் என்கின்றனராம். இது ஒரு பக்கம் சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்திருக்கிறார். இப்படமும் பிஸினஸ் மேனாக கொடூரமான வில்லனாக நடிக்கிறாராரம். சீனா - இந்திய எல்லை குறித்தும் இப்படத்தில் பேசப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா பாடல் வைரல்: எஸ்.ஜே.சூர்யா படங்களில் நடித்து கொண்டு பிஸியாக இருந்தாலும், பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஹீரோக்களை விட மிக அழகாக ஜொலிப்பார். சமீபத்தில் அளித்த பேட்டியில் மயிலிறகை பாடலை கொஞ்சம் மாடுலேசன் மாற்றி எஸ்.ஜே.சூர்யா பாடியிருப்பார். ஆனால். அவரது கரகர குரலால் பாடல் வரிகளை மணப்பாடம் செய்வது போல் இடம்பிடித்தன. இந்நிலையில், இப்பாடலை பார்த்த நெட்டிசன்கள் எஸ்.ஜே.சூர்யாவை கலாய்க்க தொடங்கினர்.மேலும், பாட்டு பாட தெரிந்தால் பாடுங்க தலைவரே அவர் சொன்ன வசனத்தை அவருக்கே திருப்பி போட்டு கலாய்த்தனர். இந்நிலையில், நானியுடன் நடித்த பட புரோமோஷன் விழாவில் தொகுப்பாளினி ஒருவர் நானியை பாட சொன்னபோது நானியை எச்சரித்தார். வேண்டாம் சார். வேண்டாம். நானும் இப்படித்தான் ஒரு பாட்டு பாடிட்டு படாத பாடு படுறேன். என நக்கலாக பேசியதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கே எம்ஜிஆர்: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையோடு இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிடம் நீயா நானா கோபிநாத் அவரது சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா பல விசயங்களை தெரிவித்தார். அப்போது கோபிநாத் ஏன் இன்னும் நீங்க சிங்கிளாக இருக்கிறீர்கள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?. அதை சொன்னால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என தெரிவித்தார். பின்பு, வலிகளை சுமந்த கண்களோடு மவுனம் காத்த எஸ்.ஜே.சூர்யா சிரித்தபடி பதில் அளித்தார். இதுவரை நான் காத்து வந்த சுதந்திரம் பறிபோகவில்லை. நன்றாக இருக்கிறது. 2வது நான் அடைய வேண்டிய இலக்கை இன்னும் அடையவில்லை அதனால், திருமணத்தை பற்றி யோசிக்க முடியவில்லை என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார். பின்பு பேசிய அவர், நான் நினைப்பது நடக்கலாம், நடக்காமல் போகலாம். ஆனால், நடந்தாலும் மகிழ்ச்சி, நடக்காவிட்டாலும் மகிழ்ச்சி என்றார்.
கேள்வி அப்படி என்ன நினைத்திருக்கிறீர்கள் என கோபிநாத் கேட்டதும், எஸ்.ஜே.சூர்யா நிதானமாக இந்தியாவுக்கே எம்ஜிஆர் ஆவது என தெரிவித்ததும் அந்த அரங்கமே அதிர்ந்தது. கரகோசங்களை ரசிகர்கள் எழுப்பினர். மேலும் பேசிய அவர் ஒரு தமிழனை இந்தியா முழுக்க பேச வேண்டும். அது இன்னும் நன்றாக இருக்கும் என்றார். எனது சின்ன வயதிலேயே இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எம்ஜிஆர் மாதிரி ஒரு நடிகர் அழுகவும், சிரிக்கவும் செய்திருக்கிறார். அவர் வந்தால் விசில் சத்தம் பறக்கும். அவர் புகைப்படத்தை பார்த்து புகழாதவர்களே கிடையாது என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை உருவாக்கினேன்: பின்னர் கோபிநாத் அவரிடம் நீங்கள் மீண்டும் படம் இயக்க தயராக இருககிறீர்களா என கேள்வி எழுப்பினார். அப்போது, நான் படம் இயக்குவது, தயாரித்தது, எடிட்டிங், இசை என அனைத்தையும் கற்றுக்கொண்டது எஸ்.ஜே.சூர்யாவை நடிகனாக உருவாக்க முயற்சித்தது. இதை விட ஒரு நடிகனாக வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. பல பேர் விரும்பி கேட்கும் இயக்குநரை நான் எனக்கு வேலைக்காரனாக வைத்திருக்கிறேன். அவ்வளவுதான் என தெரிவித்தார்.
இந்தியாவே பார்க்க வேண்டும்: ஏன் எம்ஜிஆர் மாதிரி ஆசை என்று கூறினேன் என விளக்கம் அளித்த எஸ்ஜே.சூர்யா, பாலிவுட்டில் ஷாருக்கான் இருக்கிறார். ஆனால், அவர் படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியானால் எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும். பிசினஸ் பெரிய அளவில் இருக்காது. ஆனால், இந்தியா முழுக் ஒரு ஸ்டார் நடிகர் பிரபலம் அடைந்தால் அவரோட பிஸினஸ் இந்திய அளவில் பெரிய வெற்றியை பெறும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார். இதை கேட்டு கோபிநாத் வியந்து ரசித்தார். இப்படி ஒரு பார்வை உங்களிடம் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்தார்.
அஜித் இல்லாமல் நான் இல்லை: நடிகராக ஆசைப்பட்டுதான் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால், ஒரு இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை நம்ப வேண்டும். அப்படி நம்பியதால் தான் இன்று ரஜினி என்ற நடிகர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அதேபோன்று என்னை இயக்குநராக நம்பியவர் அஜித். அவரை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இல்லையென்றால் நான் இங்கு இல்லை. அஜித் இல்லாமல் நான் இல்லை என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார். மேலும், என்னை பார்த்தால் யாரும் மதிக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். அப்படி ஒருத்தனை கூப்பிட்டு படம் பண்ணு என்று சொன்னவர் அஜித். அது அவர் போட்ட விதை என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











