என் சொந்த வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து இருக்கேன்.. மாமன் படம் குறித்து மனம் திறந்த சூரி!
சென்னை: வரும் 16ஆம் தேதி தமிழ் சினிமாவில் பலரது மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அதில் பிரபு சாலமனின் லெவன், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரியின் மாமன் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இது மட்டும் இல்லாமல் சேரனின் ஆட்டோகிராஃப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மாமன் படத்தின் நாயகனும் கதாசிரியருமான சூரி மாமன் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நமது பிலிமி பீட் தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவரும் மாமன் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லெக்ஷ்மி என இருவரும் எக்ஸ்க்ளூசிவாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூறும்போது, இந்த படத்தின் கதையைக் கேட்டதும் நான் உடனே முடிவு செய்துவிட்டேன். நான் சிறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். கதை கேட்கும் போது மிகவும் குறைவான உறவுகளே எனது மனதிற்கு வந்து போனார்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பார்த்தால், ஒவ்வொரு காட்சிக்கும் பல கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படத்தை பார்க்கும்போது எனக்கும் இதுபோல ஒரு மாமன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது" என்று கூறினார்.

மாமன் சூரி: அதேபோல் நடிகர் சூரி கூறும்போது, " நான் நானாகவே 7 நாடகங்களுக்கான கதைகளை எழுதி நடித்துள்ளேன். சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டு இருக்கும் போது கதைகள் எழுதி நடிக்கச் செய்தேன். மாமன் படத்தின் கதையை நான் கொரோனா காலகட்டத்தில் எழுதினேன். கொரோனா காலகட்டத்தில் நான் சுமார் ஆறு, ஏழு கதைகளை எழுதினேன். அதில் ஒரு கதைதான் மாமன். மாமன் கதையை நான் எழுதியுள்ளதால் அந்த படத்தில் நானே நடிக்க முக்கிய காரணம் கிடையாது. எனக்கு எந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கே தெரியும் அல்லவா. அதனால்தான் நான் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
சொந்த வாழ்க்கை: இது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் கதையை எனது சொந்த வாழ்க்கையில் இருந்து எடுத்துள்ளேன். எனக்கு பொதுவாக கதை எழுதும் பழக்கம் உள்ளது. காரில் பயணிக்கும்போது, யாரிடமாவது பேசும்போது, ஏதாவது யோசிக்கும்போது தோன்றுவதை எழுதியோ, வாய்ஸ் ரெகாட் செய்தோ வைத்துக் கொள்வேன். மாமன் எப்போதும் மற்ற உறவுகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது மட்டும் இல்லாமல் ஸ்பெஷலானது. ஒருவன் மாமன் ஆன பின்னர் அவரது வாழ்க்கை முடியும் வரை மாமன் என்பது தனிப்பட்ட பந்தம். அதைப் பற்றி பேசுகிற படமாக இந்த படம் இருக்கும்.

நம்பிக்கை: இந்த படத்தின் கதையைக் கேட்டதும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறேன் என்று சொன்னதும், அவர் இந்த கதை மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பது தெரிந்துவிட்டது. படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்" என்று பேசியுள்ளார். இந்த படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் கதையை சூரி எழுதியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் இந்த படத்தை பார்க்க ஆவலாக காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











