Actor Soori: என் குடும்பம் தான் என் குலசாமி... உருக்கமாக பேசிய நடிகர் சூரி!
சென்னை: விடுதலை, கருடன், கொட்டுக்காளி படத்தை தொடர்ந்து, நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மாமன். இப்படம் மே 16ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேசிய நடிகர் சூரி என் குடும்பம் தான் என் குல சாமி என்றார்.
நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர் சூரி தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, சூரியின் கதையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் 'மாமன்'. இப்படத்தில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி ஆகியோர் நடித்துள்ளனர். தாய் மாமன் உறவை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

சூரியின் மாமன்: லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் பேசி லோகேஷ் கனகராஜ், சூரி அண்ணாவின் வளர்ச்சி யாருமே பார்த்து பொறாமைப்படாத வளர்ச்சி, நாம் வளர்வதைப்பார்த்து பொறாமைப்படாததே உண்மையான வளர்ச்சி. என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் 10 கதைகளில் ஐந்து கதைகள் சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டதாக இருக்கிறது. அது உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயம் அவர் மேலும் வளர வேண்டும் என்று பேசி இருந்தார்.
என் குலசாமி: மாமன் திரைப்படம் 16ந் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, என் குடும்பம் தான் என் குலசாமி, இந்த படத்தில் இயக்குநர் பிரசாந்த், சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்ல டா... பொண்டாட்டி அடுத்து தான் சாமி... என ஒரு வசனம் வைத்து இருப்பார். அந்த வசனம் என் மனத்தை மிகவும் கவர்ந்து விட்டது. அதுப்போலத்தான், சாமிக்கு அப்புறம் குடும்பம் இல்ல, குடும்பத்திற்கு பிறகு தான் சாமி. இந்த குடும்பம் நான் பிறந்ததால் தான், கஷ்ட நஷ்டம், அடுத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்கிற எல்லாத்தையும் எனக்கு கற்று கொடுத்தது என் குடும்பம் தான்.
மாமா படம் உருவானதும் என் குடும்பத்தில் இருந்து தான், பாண்டியராஜ் , சிவா சார் போல பேனாவை எடுத்துவைத்துக்கொண்டு, சிந்தித்து சிந்தித்து எழுதவில்லை. அனைவருடைய வாழ்க்கையில் பார்த்த விஷயம், நான் வாழ்க்கையில் பார்த்ததை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் நடிக்க காரணம், எனக்கு இந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான் நான் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன். மாமன் எப்போதும் மற்ற உறவுகளில் இருந்து மிகவும் வித்தியாசமான ஸ்பெஷனான உறவு. இந்த படத்தை தியேட்டரில் பார்த்து படம் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் என்று சூரி பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











