ஹீரோயின்களிடம் ஃப்ரீயா நடிங்க.. கணவன் மனைவியா நெருக்கம் வேண்டும்.. சூரிக்கு மனைவி கொடுத்த டிப்ஸ்!

சென்னை: நகைச்சுவை நடிகராக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பரோட்டா சூரியாக கலக்கி வந்த சூரிக்கு வெற்றிமாறன் விடுதலையை கொடுக்க ஹீரோவாக மாறிவிட்டார். கருடன், கொட்டுக்காளி என நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் சூரி அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கே போட்டியாக மாறும் அளவுக்கு ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் மனங்களை கவர மாமன் ஆக வரும் மே 16ம் தேதி வர காத்திருக்கிறார்.

விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு எல்லாம் சந்தானத்தை ஓவர்டேக் செய்துவிட்டு செல்ல தன்னுடைய பலத்தை டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம் காட்டலாம் என நினைத்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு சூரி மாமன் படத்தின் மூலம் மிகப்பெரிய செக் வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Actor Soori wife Mahalakshmi gives super tips to act in romantic scenes with heroines

நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி ஹீரோயின்களை கலாய்த்து காமெடி செய்து வந்த நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற ஹீரோயினுக்கு ஹீரோவாக திரையில் எப்படி தெரியப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை விட ஒருபடி அதிகமாக அவரது மனைவி மகாலட்சுமி காத்திருப்பதாக சமீபத்தில் பிலிமிபீட் தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் சூரி.

ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின்: லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாராகவும் அட்டகத்தி தினேஷுக்கு மனைவியாகவும் நடித்த ஸ்வாசிகா சூரிக்கு சகோதரியாக மாமன் படத்தில் நடித்துள்ளார். இருவரது பாசப்போராட்டம் இன்னொரு பாச மலர் படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாகவும் கட்டா குஸ்தி படத்தில் குஸ்தி போடும் பெண்ணாகவும் நடித்து அசத்திய ஐஸ்வர்யா லட்சுமி காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சூரிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இருவரும் கணவன் - மனைவியாக இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மனைவி மகாலட்சுமி: ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஜோடியாக சூரி மாமன் படத்தில் நடித்துள்ளார். அவரது மனைவியின் பெயரே மகாலட்சுமி தான். சூரிக்கு வெண்ணிலா மற்றும் சரவணன் என இரு குழந்தைகளும் உள்ளனர். சினிமாவில் தனது 2.0 வெர்ஷனை ஹீரோவாக தொடங்கியுள்ள சூரி தனக்கு இனிமேல் பெரிதாக பணத்தின் மீதெல்லாம் ஆசை கிடையாது என்றும் நல்ல படங்களில் நடித்தால் போதும் என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக மண்டாடி படத்திலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் ஹீரோவாகவும் தெலுங்கில் வில்லனாகவும் நடிக்க நிச்சயமாகவே சூரிக்கு செம துணிச்சல் வேண்டும்.

ஹீரோயின்களுடன் ஃப்ரீயா நடிங்க: காமெடி நடிகராக நடித்த போதே ஷாலு ஷம்மு உள்ளிட்ட சிலருடன் ஜோடி போட்டுத் தான் நடித்திருக்கிறார் சூரி. சீமராஜா படத்தில் எல்லாம் அவருக்கு 3 மனைவிகள் போல ஆரம்பத்தில் காட்டுவார்கள். ஆனால், ஹீரோவாக ஆன பின்னர், விடுதலை படத்தில் பவானி ஸ்ரீ உடன் "வழிநெடுக காட்டுமல்லி" என ரம்மியமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த சூரி இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் கணவன் - மனைவியாக நடிக்க ஆரம்பத்தில் தயங்கியதாகவும் தனது மனைவி தான் ஹீரோயின்களுடன் எப்போதும் ஃப்ரீயா நடிங்க, நீங்க மத்த எல்லாவற்றையும் பண்ணிட்டீங்க.. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில் தான் இன்னமும் நல்லா நடிக்கல, அதில் கவனம் செலுத்துங்க. கூட நடிக்கிற நடிகைகளுடன் பேசி நட்பாக பழகினால் தான் கணவன் - மனைவியாக நடிக்கும் போது நெருக்கமான உணர்வு வரும் எனக் கூறினார் என சூரி பேட்டியில் கூறியுள்ளார்.

FAQs
நடிகர் சூரியின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் என்ன?

நடிகர் சூரியின் மனைவியின் பெயர் மகாலட்சுமி. சூரிக்கு வெண்ணிலா மற்றும் சரவணன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X