விஜய் என்கிட்ட மன்னிப்பு கேட்டாரா? ஏன் இப்படி கொளுத்தி போடுறீங்க.. கடுப்பான நடிகர்!

சென்னை: சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சௌந்தரராஜன். குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தெறி படப்பிடிப்பின் போது நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார.

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரபாண்டியன், அதில், சசிகுமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் பிரபலமான சௌந்தரராஜன், ஜிகிர்தண்டா, றெக்க, தெறி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டது.

Actor SoundaraRaja shared interesting information about Theri movie

சாரி.. பாக்கலப்பா: இந்நிலையில் தெறி படத்தில் நடித்தது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சௌந்தரராஜன். நான் விஜய் சார் கூட தெறி படத்தில் நடித்தேன், அவருக்கும் எனக்கும் ஒன்றாக இருக்கும்படி காட்சியே இல்ல, அவர் நடித்து விட்டு சென்றுவிடுவார், அதற்குபின் தான் நான் வந்து நடிப்பேன். அப்படியேத்தான் அந்த படத்தின் படப்பிடிப்பு போய் கொண்டு இருந்தது. அவரை பார்க்கவே முடியவில்லை. என் கால்ஷீட் முடியும் நேரத்தில் அவரை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று காத்திருந்து அவரை சந்தித்து பேசினேன். அப்போது, வணக்கம் சார், என் பெயர் சௌந்தரராஜன், சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து இருக்கிறேன் என்று சொன்னேன் தெரியும் என்று சொல்லிவிட்டு, சாரி பா… இருட்டாக இருந்ததால் நான் பார்க்கவில்லை என்று சொன்னார்.

தப்பா நினைக்கிறாங்க: இதையடுத்து நேர்காணல் ஒன்றில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் உங்களிடம் முதலில் என்ன பேசினார் என்று கேட்டார். நான், அவர் சாரி சொன்னார் என்று சொன்னேன், அவ்வளவுதான். உடனே சௌந்தரராஜனிடம் மன்னிப்பு கேட்ட தளபதினு தலைப்பில் வைக்கிறார்கள். அதைப்பார்த்துவிட்டு நாலு பேர் என்னை தப்பா நினைக்கிறார்கள், அவரை பற்றி பேசி நான் பிரபலமாகிறேன் என்று நினைக்கிறார்கள் இது என்னை ரொம்ப தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது என்று சௌந்தரராஜன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X