நேர்ல பார்த்தா அடிச்சு வெளுத்துருவேன்னு மிரட்டினார்கள்.. மனம் திறந்த ஜெய் பீம் போலீஸ் குருமூர்த்தி!

சென்னை: ஜெய் பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகரும் இயக்குநருமான தமிழ் படம் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Jai Bhim SI Guru-வ நேர்ல பாத்தா அடிச்சு வெல்லத்துடன் | Actor Thamizh Exclusive

டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் ஜெய் பீம். இந்தப் படம் அண்மையில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
இருளர் என மக்கள் காவல்துறையால் சந்திக்கும் பிரச்சனைகளை ஆழமாகவும் அழுத்தமாகவும் கூறியுள்ளனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

உண்மையிலேயே அடித்துவிட்டேன்

உண்மையிலேயே அடித்துவிட்டேன்

இந்நிலையில் இப்படத்தில் எஸ்ஐ குருமூர்த்தியாக மிரட்டிய, நடிகரும் இயக்குநருமான தமிழ் பிலிமி பீட் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, படத்தில் இயக்குநர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளேன் என்று நம்புகிறேன். பல இடங்களில் உண்மையிலேயே அடித்துவிட்டேன். ஆனால் மணிகண்டன் அப்போது அதனை சொல்லவில்லை.

போலீஸாக பணிபுரிந்தேன்

போலீஸாக பணிபுரிந்தேன்

வலிக்கிறதா? உண்மையிலேயே அடித்துவிட்டேனா? என்று கேட்டேன். ஆனால் அதற்கெல்லாம் இல்லை அண்ணா என்றார். பிறகு சொன்னார், சில அடிகள் பயங்கரமாக வலித்தது என்று. என்னுடைய சொந்த ஊரு ராமேஸ்வரம். போலீஸாக பட்டாலியனில் சேர்ந்தேன். மணிமுத்தாறு மற்றும் பீகார் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்தேன்.

அடிச்சு வெளுத்துருவேன்டா

அடிச்சு வெளுத்துருவேன்டா

படத்தில் நடிக்கும் போது வில்லன் என்பதை மனதில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் எதார்த்தமான நடிப்பு வெளியானது. விசாரணை, வடசென்னை படங்களில்

வெற்றிமாறன் அண்ணனிடம் வேலை பார்த்த அனுபவமும் உதவியது. இந்த படத்தில் நடித்த பிறகு, பலர் நள்ளிரவில் போன் செய்து நேர்ல பார்த்தா அடிச்சு வெளுத்துருவேன்டா என்று கூறுகிறார்கள்.

என் மனைவியே அப்படி கூறினார்

என் மனைவியே அப்படி கூறினார்

என்னுடைய நெருங்கிய நண்பர்களே என் மீது கோபப்படுகிறார்கள். படம் பார்த்துவிட்டு என் மனைவியே இனிமே இதுபோன்ற ரோல் பண்ணாதீங்க என்றார். படத்தை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, நடிகர் நரேன், பா ரஞ்சித் உட்பட பலரும் தனது நடிப்பை பாராட்டினர்.

தொட்டால் கேள்வி கேட்பார்கள்

ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று கூறிய நடிகர் தமிழ், படத்தில் தனக்கு பிடித்த டயலாக் எது என்பதையும் ஷேர் செய்துள்ளார். போலீஸாக சூர்யா மற்றும் விஜயகாந்த் நடித்த படங்கள் பிடிக்கும் என்ற அவர், தன்னுடைய போலீஸ் நண்பர்களும் தனது நடிப்பை பாராட்டியதாக கூறியுள்ளார். இனிமேல் ஒடுக்கப்பட்ட மக்களை போலீஸ்காரர்கள் தொட்டால் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்றும் கூறியுள்ளார் நடிகர் தமிழ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X