twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எழுத்தாளர்கள் சினிமால தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்னு பேசுவாங்களே..என்ன சொல்கிறார் வேல ராமமூர்த்தி?

    By
    |

    சென்னை: நடிப்பு என்பது போல செய்வது. தன்னை மீறி வேறொன்றாக மாறுவது. அது எல்லோராலும் முடிகின்ற எளிதான கலை அல்ல.

    அப்படி மாறுகின்ற நடிகர்களில், அச்சு அசலான தெக்கத்தி கிராமத்து மனிதரை கண்முன் நிறுத்துபவர், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி!

    ஒட்ட வெட்டிய முடியும் உயரத் திருகிய மீசையுமாக 'மதயானைக் கூட்டத்'தில் தனது அறிமுகத்தை அழுத்தமாக பதித்த அவர், ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார்.

    என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா? எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி!என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா? எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி!

     லாக்டவுன் நேரத்தை எப்படி பயன்படுத்தறீங்க?

    லாக்டவுன் நேரத்தை எப்படி பயன்படுத்தறீங்க?

    இந்த லாக்டவுனில் மதுரையில் இருக்கும் அவரிடம் பேசினோம்.

    எனக்கு கிடைச்ச வாய்ப்பா இந்த லாக்டவுனை நினைக்கிறேன். படப்பிடிப்புக்காக, சென்னை, மதுரை, ஐதராபாத்-னு வேகவேகமா ஓடிட்டிருக்கிற படைப்பாளனுக்கு கிடைச்சிருக்கிற இந்த நேரம், முக்கியமானது. ஏற்கனவே எழுது, எழுதுன்னு எனக்குள்ள என்னைத் தூண்டிக் கிட்டிருக்கிற ஒரு நாவலை, இந்த நேரத்துல எழுதி முடிச்சிருக்கேன்.

    உங்க படைப்புகள் எல்லாமே மண் சார்ந்ததாகவே இருக்குதே..

    உங்க படைப்புகள் எல்லாமே மண் சார்ந்ததாகவே இருக்குதே..

    இந்த நாவலும் அப்படித்தான். நான் சந்தித்த, வாழ்ந்த, பார்த்த, கேள்விபட்ட மனிதர்கள் எனக்குள்ள இன்னும் வாழ்ந்துகிட்டிருக்காங்க. என்னோட தினமும் பேசிட்டு இருக்காங்க. அவங்களையும் அவங்க வாழ்க்கையையும்தான் எழுதணும்னு நினைக்கிறேன். அதனாலதான் என்னையறியாமலேயே, அவங்களோட அன்பும் கோபமும் உறவும் என் படைப்புகள்ல வந்து விழுது. என்னோட புதிய நாவலுக்கு 'கடக்கொம்பு'ன்னு தலைப்பு வச்சிருக்கேன். கடைமடை-ன்னு சொல்றோம்ல, அதுதான் கடக்கொம்பு.

    சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதறதா சொல்லியிருந்தீங்களே..?

    சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதறதா சொல்லியிருந்தீங்களே..?

    எழுதி முடிச்சுட்டேன். அதுக்கான வாய்ப்பைக் கொடுத்ததும் இந்த லாக்டவுன்தான். சில நடிகர்கள் கதை கேட்டாங்க, சொல்லியிருக்கேன். இப்ப சலவைத் தொழிலாளிகள் வாழ்க்கையை சொல்ற ஸ்கிரிப்ட்டை எழுதியிருக்கேன். அந்தச் சமூகத்தின் மீதான அக்கறையில எழுதப்பட்டக் கதை. ஒருவேளை நான் டைரக்டரா அறிமுகமாகப் போகிற படமாகவும் இது இருக்கலாம்.

    நடிப்பு எப்படியிருக்கு?

    நடிப்பு எப்படியிருக்கு?

    எனக்கு சுலபமா இருக்கு. என் புத்தகங்களை படிச்சவங்க எல்லாருமே, கதை கண்முன்னால விஷூவலா ஓடும்னு சொல்வாங்க. நான் கலைஞனாக இருக்கிறதால கேரக்டரை எனக்குள்ள வாங்கிக்கிறதும் அந்த கேரக்டருக்குள்ள ஊடுருவறதும் எளிதா இருக்கு. நான் ஏற்கனவே எழுத்தாளரா அறியப்பட்டிருக்கிறவன் அப்படிங்கறதால, எனக்கான மரியாதையும் சினிமாவுல கிடைக்குது.

    பொதுவா, எழுத்தாளர்கள் சினிமாவுல தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்னு சொல்வாங்களே..

    பொதுவா, எழுத்தாளர்கள் சினிமாவுல தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்னு சொல்வாங்களே..

    உண்மைதான். என்னன்னா டைரக்டர் ஒரு விஷயம் சொன்னா, அதை இப்படி மாத்தலாமே, அப்படி மாத்தலாமேன்னு ரைட்டரா இருக்கிறவங்க சொல்றது வழக்கம். அவங்க மனசு அப்படித்தான். அது இயல்பாவே தோணும். ஆனா, அதை டைரக்டர்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஏன்னா அது அவங்க படைப்பு. அவங்களுக்கு அதுதான் வேணும்னு நினைக்கிறாங்க. நடிக்கிறதுக்கு போயிட்டா, அங்க நாம நடிகன்தான். அவங்க சொல்ற வசனங்கள் மேல கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை ஏத்துக்கிட்டு நடிக்கணும். அதுதான் நம்ம வேலை. நான், இதை மட்டும்தான் செய்றேன். அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

    மலையாளத்துல நடிக்கிறீங்களாமே?

    மலையாளத்துல நடிக்கிறீங்களாமே?

    ஏற்கனவே 'வில்லன்' படத்துல விஷாலுக்கு அப்பாவா சின்ன கேரக்டர்ல நடிச்சிருந்தேன். இப்ப சுரேஷ் கோபியும் அவர் மகனும் நடிக்கிற படத்துல மெயில் வில்லனா நடிக்கிறேன். நல்ல கேரக்டர். என்னையும் என் நடிப்பையும் பார்த்துட்டு அழைத்த படம் இது.

    ரஜினி படத்துல நடிக்கிறீங்களே?

    ரஜினி படத்துல நடிக்கிறீங்களே?

    ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துல நடிக்கிறேன். படம் முழுவதும் வர்ற பெரிய கேரக்டர். அடுத்து சூர்யா நடிக்கிற படம், விக்ரம் பிரபுவோட ஒரு படம்னு சில படங்கள் இருக்கு. சினிமாவுக்கு எதையும் எதிர்பார்த்து நான் வரலை. அதன் போக்கில் போய்ட்டிருக்கு வாழ்க்கை. நடிக்கிறது மகிழ்ச்சியை கொடுக்குது.

    English summary
    Actor Vela Ramamoorthy has planned to direct a movie, for that he has completed a script.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X