Vela Ramamoorthy: எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது அவமானமா? வேல ராமமூர்த்தி வேதனை!
சென்னை: எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமே எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது தான் என்று வேல ராமமூர்த்தி பேட்டியில் தெரிவித்துள்ளார். சீரியலில் மாரிமுத்துவின் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவர் இறந்த பிறகு அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
சன் டிவியில் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியல் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் நான்கு சிங்கப்பெண்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே பிக் அப் ஆனது. அதற்கு காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பும் தான். இதனால் இந்த சீரியலுக்கு டிஆர்பியும் நாளுக்கு நாள் எகிறிய வண்ணம் இருந்தது.

ஏய் இந்தாம்மா: எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக இருந்தது அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான், அவர் பேசிய வசனமானது ஏய் இந்தாம்மா மிகப்பெரிய அளவில் பிரபலமாகி, மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சமூக வலைதளங்களிலும் டிரெண்டானது. அவரின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனது. இதனால் எதிர்நீச்சல் சீரியலால் மாரிமுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
மாரிமுத்து உயிரிழந்தார்: அந்த சீரியல் வெற்றிநடைபோட்டு வந்த சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் மறைவு சீரியல் குழுவினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை வட்டாரத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரின் மறைவுக்கு பின்னர் எதிர்நீச்சல் சீரியல் கடும் சரிவை சந்தித்தது.
வேல ராமமூர்த்தி: மாரிமுத்து இடத்தை நிரப்ப ஆள் கிடைக்காமல் திண்டாடி வந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தியை ஆதி குணசேகரனாக நடிக்க வைத்தனர். அவர் திறமை வாய்ந்த நடிகராக இருந்தாலும் அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பது தான் பலரும் முன்வைத்த விமர்சனமாக இருந்தது. பின்னர் படிப்படியாக டிஆர்பியிலும் இந்த சீரியல் மீண்டு வந்த நிலையில், திடீரென அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்தது சன் டிவி.
வேதனை: எதிர்நீச்சல் மாரிமுத்து இறந்த பிறகு, ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் வேல ராமமூர்த்தி, அந்த சீரியலில் ஏன்டா நடிச்சோம்னு இருக்கு, மிகப்பெரிய அவமானமாகவே நான் பார்க்கிறேன். கடைசி வரை ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை என்று வேதனைப்படுவதாக இணையத்தில் ஒரு செய்திபடுவேகமாக பரவி வருகிறது.இதற்கு பதில் அளித்துள்ள, அவர், ஏய்.. ஏப்பா டேய், இது எவன் பாக்குற வேலை,இப்படி ஒரு பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. அந்த சீரியல் என்னை உலக தமிழர்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது. அதில் நான் மனப்பூர்வாக பங்கேற்றேன். இது தான் உண்மை என்று பதிவிட்டுள்ளார்.
மதயானைக்கூட்டம்: தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் வேல ராமமூர்த்தி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.


Click it and Unblock the Notifications











