வெற்றியின் வெற்றி படங்கள் வரிசையில் ...கனமான கதையுடன் "வனம்" பற்றி ஸ்பெஷல் செய்தி சொல்லுகிறார்
சென்னை : எட்டுதோட்டாக்கள், ஜீவி, கேர் ஆப் காதல் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்த ஒரு முத்திரை பதித்திருக்கிறார் நடிகர் வெற்றி.
வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கும் வெற்றி இந்த முறை பாலுமகேந்திரா சிஷ்யன் என்று பெருமையாக சொல்லு கூடிய ஸ்ரீகண்டன் இயக்கத்தில் வானம் எனும் படம் மூலம் கவனம் ஈர்க்கிறார் .
வெற்றி,அனுசித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட்டிப்பில் இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வனம். ரான் ஈத்தன் பிண்ணனி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் மிகப்பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வனம் பற்றி நம்மிடம் மனம் திரந்து பேசுகிறார் நாயகன் வெற்றி.
நான் வெறும் கருவிதான்
கேள்வி : வெற்றியின் அடுத்த வெற்றிக்கு காரணமான இயக்குனர் பத்தி சொல்லுங்களேன்.
பதில் : இயக்குனர் ஸ்ரீகண்டன் ரொம்பவே சிறப்பா பண்ணிருக்காரு. இந்த படத்துக்கு என்ன என்ன தேவையோ அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணிருந்தாரு. ஒவ்வொரு கேரக்டர் பேரு கூட அழகான தமிழ்ல இருக்கும். கதை, ஸ்க்ரீன்ப்ளேன்னு எல்லாமே பக்காவா பண்ணிருக்காரு. கேரக்டர் இதுதான் இப்படித்தான்னு தெளிவா சொன்னாரு. என்ன என்ன வேணுமோ அது எல்லாத்தயும் படத்துல குடுத்துருக்காரு. நான் ஒரு சின்ன கருவிதான்.

1980க்கு பிறகு இப்பதான் ஷூட்
கேள்வி : அமானுஷ்யங்கள், த்ரில்லர் நிறைஞ்ச ஷூட்டிங் இடம் எப்படி இருந்துச்சு?
நிறைய விஷயங்கள் அங்க போயி கத்துகிட்டேன். ஒருத்தர உட்கார வச்சி படம்தான் வரையுவாங்க. ஆனா அங்க உட்காரவச்சி அப்படியே சிலையா வடிக்கிறாங்க. நிறைய அமானுஷயங்கள் பத்தில்லாம் இந்த படத்துல இருக்கும். 1980களோட அந்த சிற்பக்கல்லூரியில ஷுட்டிங் அனுமதிக்கல. பலபடங்கள் எடுக்கப்பட்டுருக்கு. இப்ப ரொம்ப வருஷங்களுக்கு பிறகு அந்த இடத்துல படம் எடுத்ததும், அதுல நான் நடிச்சதும் ரொம்ப சந்தோஷம்.

ரொமான்ஸ், டூயட் இல்லயாம்
கேள்வி : ரொமாண்டிக், டூயட் ல்லாம் இல்லாத படத்துல நடிச்சிருக்கீங்க, இத பத்தி சொல்லுங்க.
பதில் : இந்த படத்துக்கு அதெல்லாம் தேவைப்படல அவ்வளவுதான். மத்தபடி அப்படியெல்லாம் இருந்தால்தான் நடிப்பேன்னு ல்லாம் இல்ல.
கேள்வி : ஒரு கொக்கியில உங்கள கட்டி மாட்டிவிட்ட சீன் இருக்குமாமே?
பதில் : முதல்ல அது தேவையான்னு தோனுச்சு. நடிக்கும் போதும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்பறம் முழுசா படம் வந்த பிறகு பார்த்தா எவ்வளவு முக்கியம்ன்னு தோணுச்சு. நிறையபேர் அந்த காட்சிய பாத்துட்டு நல்லாருக்குன்னு சொன்னாங்க. நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.

மெரண்டு போயிட்டாங்க
கேள்வி : இந்த படத்தின் நடிகை அனுசித்தாரா, கேமராமேன் இவங்கள பத்தி சொல்லிங்களேன்?
அனுசித்தாராவுக்கு தமிழ் தெரியாது, மலையாளி. ஆனா அவ்வளவு டெடிகேஷன். ஒரு சில காட்சிகள் ல அவங்கள மிதிக்கிறமாதிரி படத்துல வரும். அதுக்கு சித்தாரா எந்த மறுப்பும் சொல்லாம, அந்த பர்பெக்ஷன் வர்ற வரைக்கும், சாதாரணமா இல்லாம, ரியலா இன்னும் இன்னும் இயல்பா மிதிங்கன்னு சொல்லி அந்த ஷாட் பண்ணிருந்தாங்க. டீம் ல எல்லாருமே ரொம்ப ஷாக் ஆகிட்டோம். அந்த டெடிகேஷன் ரொம்ப பாராட்டத்தக்கது. கேமரா மற்றும் சவுண்டு தான் இந்த படத்த மேலும் மெருகேத்திருக்கு.

சமூகத்துக்கு செய்வார்கள்
கேள்வி : வனம் பார்த்த மக்களுக்கு கிடைப்பது என்ன?
நல்ல படம் பார்த்த ஒரு உணர்வு இருக்கும். குடுத்த காசுக்கு ஏமாறாம நல்ல ஒரு படைப்ப பார்த்த சந்தோஷம் திருப்தி கிடைக்கும், படத்துல ஒரு சோசியல் மெசேஜ் இருக்கு. நிச்சயமா மக்களுக்கு, சமூகத்துக்கு எதாவது செய்வாங்க
கேள்வி : உங்களோட அடுத்த படங்கள் என்ன ?
ஜோதி, மெமரீஸ், ரெட் சாண்டல், போன்ற படங்கள் வர இருக்கு. ரெட் சாண்டல் படத்த பத்தி நிறைய கருத்துக்கள் வந்துகிட்டு இருக்கு. என்கவுண்டர்ன்னதுமே சுட்டு கொல்றது மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா அதைத்தாண்டி அவர்களோட வாழ்க்கை பிண்ணனி பத்தியும், இந்த படத்துல ரொம்ப அழகா சொல்லப்பட்டிருக்கு. என்று சொல்லிமுடித்தார் வனம் திரைப்பட நாயகன் வெற்றி. இன்னும் இன்னும் நிறைய கேள்விகளுக்கு விரிவாக நிறைய பதில்கள் வீடியோவில் உண்டு. முழு வீடியோவை காண பில்மிபீட் யுட்யூப் தமிழ் சேனல் சென்று காணலாம் .


Click it and Unblock the Notifications











