கடைசியாக அப்பாவிடம் பேசிய அந்த வார்த்தை.. எதையும் பார்க்காமலே போயிட்டாரு.. கண்கலங்கிய விஜய் சேதுபதி!
சென்னை : ஹீரோ, வில்லன், குணசித்தர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும், பின்னிபெடல் எடுக்கும் விஜய்சேதுபதியை ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று கொண்டாடி வருகின்றனர். தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது அப்பாவின் மறைவு குறித்து கண்கலங்கி பேசி உள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில்உருவாகி உ ள்ள விடுதலை 2 படத்திலும். மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் படத்திலும், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுகக் குமார் இயக்கத்தில் ஏஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதி: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஜய்சேதுபதி, தனது அப்பா குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், எங்க வீட்டில் மூன்று ஆண்கள், அதில், என்னுடன் அப்பாவும் நிறைய நேரம் பேசிக்கொண்டே இருப்போம். எப்போதும் அவர் உன்னை பத்தி உனக்கு தெரியாதுடா, நீ நல்லா வருவா என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், அந்த வளர்ச்சியை பார்க்க அவர் இல்லாது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.
நைட் 12 மணிக்கு: நான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தேன் அப்போது, நைட் 12 மணிக்கு என் அம்மா போன் பண்ணி அப்பாவிற்கு உடம்பு முடில, உடம்பு சில்லுனு இருக்கு என்று சொன்னார்கள். அந்த நேரம் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று அப்பாவின் பக்கத்தில் உங்காந்து அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் பேசியது அவருக்கு கேட்டதா, இல்லையா என்று, எனக்கு தெரியாது ஆனால் நான் அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன். மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார்.
அப்பா பார்க்கவே இல்ல: அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம், முன்னுக்கு வந்துடுவியாடா என்று கேட்டார். அப்போது நான் நடித்த ஒரு படத்தின் போட்டோவை காட்டி எனக்கு நடிக்க வருதுப்பா, கண்டிப்பா முன்னுக்கு வந்துவிடுவேன் என்றேன். அப்போது அவர், சாவதற்குள் வந்துவிடுமா என்று கேட்டார். இதற்குள் ஏன் சாவுல இரு என்று சொன்னேன். அதன்பின் ஒருவாரத்திற்குள் இறந்துவிட்டார். அப்பா இறந்து ஒரு வருடத்திற்கு பிறகு அதே நாளில் நான் ஹீரோவாக நடித்த முதல் படம் வெளியானது. இன்னைக்கு நான் வாழ்க்கிற வாழ்க்கையை அவர் பார்க்காமலே சென்றுவிட்டாரே என்கிற கவலை என் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











