‘பாண்டியநாடு‘ விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம்...விக்ராந்த் மனம் திறந்த பேட்டி !
சென்னை : சினிமாக்களில் பலரும் தங்களது சொந்த உழைப்பாலும், ஒரு சிலர் திரைத்துறை பின்புலத்தாலும் அவ்வப்போது திரைப்படங்களில் அறிமுகம் ஆகி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு திரைத்துறை பின்புலம் இருந்தும் அவர்களின் எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் முன்னேறி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் என்றால் அது நடிகர் விக்ராந்த். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பாண்டியநாடு திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன்
தளபதி விஜய்யின் சகோதரர் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைப்படங்களில் அறிமுகமான விக்ராந்த் ஒரு மிகச் சிறந்த நடிகர் என பலரும் அறியப்பட்ட நிலையில் தற்போது வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

தொடர்ந்து தோல்வி
கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ராந்த் பார்க்க தனது சகோதரர் விஜய்யை போன்று ஒரே சாயலிலேயே இருப்பதால் இவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எனினும் இவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக ஜொலிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

வெகுவாக கவர்ந்து
இவ்வாறு இவர் நடித்த அனைத்து படங்களும் இவருக்கு சரியாக அமையாமல் தோல்வியை தழுவி வந்த நிலையில் குடும்ப படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் முத்துக்கு முத்தாக மற்றும் கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்ததன் மக்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.

விஷாலின் நண்பராக
இவ்வாறு தனக்கான அடையாளத்தை கொடுத்துவந்த விக்ராந்த் 2013ம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான பாண்டியநாடு திரைப்படத்தில் விஷாலின் நண்பராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவ்வாறு விக்ராந்த் பாண்டியநாடு படத்தில் நடித்திருந்த சேது என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு சிறந்த துணை கதாநாயகன் என்ற விருதையும் பெற்றார்.

விஜய் சேதுபதி தான்
இந்த நிலையில் தற்போது பல நடிகர் நடிகைகளும் பல்வேறு சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நிலையில் விக்ராந்த் சமீபத்தில் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தொகுப்பாளர் பாண்டிநாடு திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது எனது வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பாண்டிய நாடு எனக் கூறிய விக்ராந்த், உண்மையில் பாண்டியநாடு திரைப்படத்தில் தான் நடித்த சேது கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடக்கயிருந்தது நடிகர் விஜய் சேதுபதி தான் என்று கூறினார்.

சுவாரசியமான தகவல்
பாண்டிநாடு படத்தில் சேது கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை முதலில் முடிவு செய்யப்பட்ட நிலையில் விஷால், இயக்குனர் சுசீந்திரனிடம் என்னை பரிந்துரைத்து பின் அந்த கதாபாத்திரத்தில் தான் நடித்ததாகவும் கூறினார். எனினும் இந்தப் படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த போதிலும் படம் வெளியான பின்பு இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.


Click it and Unblock the Notifications











