நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல.. அர்த்தம் கிளைமாக்ஸில் புரியும்.. விஷால் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால், பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவின.

Actor Vishal interview about Mark Antony film

இதனால் சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விஷால் தற்பொழுது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படமான மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மார்க் ஆண்டனி: இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைத்து படம், செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. எஸ்.ஜே.சூர்யா, ரீது வர்மா, அபிநயா, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ரீது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடித்தள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நல்ல வேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல: இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தில் இருந்து வெளியான ஐ லவ் யூ டி பாடலில் வரும் வரிகள் சற்று ஆபாசமாக இருந்தது. அது மட்டுமில்லாமல், பாடலின் கடைசியில் நல்ல வேளை அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்று விஷால் சொன்னது பெரும் சர்ச்சையாகி நெட்டிசன்கள் பலர் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

விஷால் பேட்டி: இந்நிலையில்,பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விஷாலிடம், இந்த சர்ச்சைக்குரிய வரி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், முன்னாடி நான் சீன் பேப்பர் பார்க்கவில்லை. படப்பிடிப்பின் போது ஸ்கூட்டர் வந்து இடிக்கும் அப்போது நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகவில்லை என்று இயக்குநர் சொல்ல சொன்னார்.

கிளைமாக்ஸ்ல புரியும்: உடனே நான் டேய், எதுக்குடா... இது, இப்போது தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சி இருக்கு, நீ மறுபடியும் கிளப்பிவிடாதே என்று சொன்னேன். இதற்கு இயக்குநர் இது டபுள் மீனிங் கிடையாது, இதைமட்டும் பாத்தாங்க என்றால், டபுள் மீனிங்குனு நினைப்பாங்க. ஆனால், கிளைமாக்ஸ் பார்க்கும் போது மக்கள் எல்லாத்தையும் புரிஞ்சிப்பாங்க என்றார். அவர் சொன்னது போல ஐ லவ் யூ பாடலுக்கு இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. அது என்னனு தெரிஞ்சிக்க மார்க் ஆண்டனி படத்தை பாருங்க என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X