விஷாலுக்கு பொண்ணு பாத்தாச்சு.. மணப்பெண் யார்? திருமணம் எப்போது.. குட் நியூஸ் சொன்ன விஷால்!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், நடிகர் சங்கம் கட்டிடம் திறந்த பிறகு தான் தனது திருமணம் என்று கூறியிருந்தார். தற்போது, நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிவடைய உள்ள நிலையில், தனது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனது பிறந்தநாளன்று வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால் Behindwoods யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் என கூறியிருந்தேன். தற்போது, அந்த வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில மாதத்தில் பணி முடிவடைந்து விடும். ஆகஸ்ட் 15ந் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவை நடித்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பிறகு ஆகஸ்ட் 29ந் தேதி என்னுடைய பிறந்த நாள் என்தால், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன், என்னுடையது காதல் திருமணமாக இருக்கும், கடந்த சில மாதமாக அந்த காதல் சென்று கொண்டு உள்ளது. அவர் யார் என்பது இன்னும் சில மாதத்தில் சொல்கிறேன் என்றார்.

திருமணம் எப்போது: நான் சினிமாவிற்கு வந்து 20 வருடம் ஆகிறது. இதில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என்றால் அது மக்கள் தான், அவர்கள் என்னை நடிகராக ஏற்றுக் கொண்டார்கள். அது மிகப்பெரிய விஷயம், அவர்கள் மட்டும் இல்லை என்றால் நான் ஒரு நடிகராகவே மாறி இருக்க முடியாது. இந்த வாய்ப்பு எனக்கு மக்கள் கொடுத்த பரிசு என்று தான் நான் நினைக்கிறேன். இதனால், தான் நான் எப்போதுமே அவர்களுடன் நேரடியாக பேசுவதை விரும்புகிறேன். இது அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். மணப்பெண் குறித்து அவர் மர்மம் காக்கும் நிலையில், இது தொடர்பான ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. விஷாலின் பிறந்தநாளில் வெளியாக உள்ள அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.
நடிகர் விஷால்: பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், 'வேதம்' படத்தில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இதைத்தொடர்ந்து, 2004ம் ஆண்டு, செல்லமே படத்தின் கதாநாயகனாக நடித்தார். விஷால் நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி' படத்தில் நடித்தார். அந்த படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அடைந்தது. அந்த படத்தில் விஷால் சண்டை காட்சியில் பலரை வாய் பிளக்க வைத்து இருந்தார். அதைத் தொடர்ந்து, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என விஷால் நடித்த ஆக்ஷன் படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோ என பெயர் எடுத்தார். சத்யம் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை அலறவிட்டார். ஆக்ஷன் படங்கள் மட்டுமில்லாமல், தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் பிளேபாய் வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது. விஷால் நடிப்பில் கடைசியாக மத கஜ ராஜா திரைப்படம் வெளியானது. 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது.


Click it and Unblock the Notifications











